டெல்லி சுல்தான் பகுதி - II

குறிப்பு
மாலிக் கப்ஃபூர்
  • தெலுங்கானா பிராந்தியத்தில் வாரங்கலின் ககாதியா ஆட்சியாளரான பிரதாபருத்ரதேவா 1309 இல் மாலிக் கஃப்பூரால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 1310 ஆம் ஆண்டில் ஹொய்சலா ஆட்சியாளர் மூன்றாம் விரா பல்லாலா தனது பொக்கிஷங்கள் அனைத்தையும் மாலிக் கப்ஃபூர் டெல்ஹி படைகளிடம் ஒப்படைத்தார்.
  • இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மதுரை மாலிக் கஃபூரால் சூறையாடபட்டது(1310 முதல் 1311)
  • இவர் இராமேஷ்வரத்தில் மசூதியை கட்டினார்
அலாவூதீன் கில்ஜு நிர்வாக சீர்திருத்தங்கள்
  • இவர் நிரந்தர இராணுவ படை ஒன்றை நிர்மானித்து அதை பராமரித்து வந்தார்.
  • இவர் தனது குதிரைகளுக்கு சூடு போடும் முறை(தாக்) கொண்டுவந்தார்
  • இவர் தனது படையில் உள்ள படைவீரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயரித்துள்ளார்.(ஊழலை தடுப்பதற்காக)ஹிலியா
  • இவர் துருக்கிய பிரபுகளின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு அவர்களின் சொத்துகளை பரிமுதல் செய்தார்.
  • துருகிய பிரபுகளின் குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் இவரின் அனுமதி பெற்ற நடந்தது.
  • இவர் மது மற்றும் போதை போருட்களை தடைசெய்தார்.
  • அது மட்டுமல்லாது சூதாட்டத்தையும் தடை செய்தார்
  • இவர் நில வரிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வசூலித்தார் இராணுவ வீரர்களின் உதவியுடன்
  • வரிகள் செல்வந்தர்களுக்கு கடுமையாக்கபட்டன 
  • ஏழைகளின் மீது வரி சுமை குறைவாகவே இருந்தது.
  • இவர் தபால் துறை அறிமுகப்படுத்தினார் நாடு முழுவதும் ஒருங்கினைக்க
  • முதல் சுல்தான் தனது படைவீரர்களுக்கு கொள்ளையடித்த பொருட்களை வழங்காமல் பணமாக சம்பளம் வழங்கினார்.
  • முன்ஹியான் என்ற விரிவான ஒற்ற படையை நிறுவினார்(கள்ள சந்தை நிலவரத்தை கண்டுபிடிக்க)
  • விற்பனை செய்யபடும் பொருட்களின் எடையில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், விற்பனையாளரின் உடலில் இருந்து சமமான சதை வெட்டப்பட்டு அவரது கண்களுக்கு முன் வீசப்பட்டது
  • இந்துக்கள் மீது ஜுஸ்யா, மேய்ச்சல் வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் மீது கடுமையான முறையில் செயல்பட்டார்.
சந்தைப்படுத்தல் அமைப்பு
  • சந்தையை முறைப்படுத்த திவான்-இ-ரியாசாத் மற்றும் ஷாஹானா-இ-மண்டி போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அனைத்து வணிகர்களும் தங்களை ஷாஹானா-இ-மண்டி அலுவலகத்தில் பதிவு செய்து தங்கள் பொருட்களை நிலையான விலையில் விற்க வேண்டும் என்று முறைப்படுத்தினார்.
குறிப்பு
  • அவர் அலாய்தர்வாஸாவைக் கட்டினார், சிறி கோட்டை மற்றும் ஆயிரம் தூண்களின் அரண்மனை கட்டினார். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த வெற்றியாளர் மற்றும் ஒரு சிறந்த நிர்வாகி.அவர் உறுதியான மனிதர்.
  • இவர் ஷெர்ஷா சூரியின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்
  • ஷெர்ஷா சூரி அலாவூதின் கில்ஜுயின் இராணுவ சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
  • ஷெர்ஷா சூரியின் நில சீர்திருங்களை அக்பர் பின்பற்றினார் ஷெர்ஷா சூரி அக்பரின் முன்னோடி என்றும் அழைக்கப்படுகிறார்.
அலாவுதீனின் வாரிசுகள்
  • அவர் தனது மூத்த மகன் கிஸ்ர் கானை தனது வாரிசாக பரிந்துரைத்தார்.
  • அலாவுதீன் 1316 இல் இறந்தார்
  • இருப்பினும், மாலிக் கபூர் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்
  • ஆனால் கஃபூரின் ஆட்சி முப்பத்தைந்து நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏனெனில் அவர் துருகிய பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கடைசி சுல்தான் கில்ஜு வம்சத்தில் நசீர் உதின் குவஸ்ர் ஷா

துக்ளக் வம்சம் 1320 முதல் 1414 வரை
  • அதன் பிறகு 1320 ஆம் ஆண்டில் மங்கோலியர்களுக்கு எதிரான பல படையெடுப்புகளில்  ஈடுபட்ட ஒரு மூத்த வீரர் காசி மாலிக், கியாஸ்-உத்-தின் துக்ளக் என டெல்ஹியின் சிம்மாசனத்தில் ஏறினார்.
  • கியாஸ்-உத்-தின் துக்ளக் ஆல் 1414 வரை நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.
கியசுதின் துக்ளக் (1320 முதல் 1325)
  • கியசுதின் துக்ளக் அவரின் மகன் ஜுனா கானை வராங்கலுக்கு எதிரான படையெடுப்பில் ஈடுபடுத்தினார்.
  • ஜுனா கான் வராங்கல் மன்னன் பத்ரபகுவை வீழ்த்தி பெரும் பொருட்செல்வத்துடன் திரும்பினார்.
  • கொள்ளையடித்த பெரும் பொருட்செல்வத்தை வைத்து தான் கியாசுதீன் டெல்ஹிக்கு அருகில் துக்ளுகாபாத் என்ற நகரத்திற்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படுகிறது
  • ஜுனா கான் தனது தந்தையை கொன்று 1325 இல் முஹம்மது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் அரியணையில் ஏறினார் என்று கூறப்படுகிறது.
குறிப்பு
வராங்கல் (பத்ரபகு)
  • 1309ல் மாலிக் கஃபூரின் படையெடுப்பை சந்தித்தது மற்றும் 
  • 1323 ல் முகமது பின் துக்ளக் ஆல் படையெடுப்பை சந்தித்தது.
முகமது பின் துக்ளக் (1325 முதல் 1351 வரை)
இயற்பெயர்:-  ஜீனாகான் (ஜான் கான்).
  • 1325 இல் முகமது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் ஆட்சி ஏறினார்.
  • சிறந்த இலக்கிய, சமய, தத்துவ, கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான்
  • இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்ற விரும்பினார்
  • இவரது 5 திட்டங்களினால் மிகவும் சர்ச்சைக்குரிய மன்னராக அறியப்படுகிறார்
  • தலைநகர் மாற்றம்
    • மங்கோலிய படையெடுப்பில் இருந்து தலைநகரை காப்பாற்ற.
    • தென்னிந்தியா மீது கட்டுப்பாட்டை உறுதிபடுத்த.
    • ஒரு நாட்டின் மையத்தில் தலைநகர் இருந்தால்தான் நிர்வாக வசதிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதற்காக.
    • தனது இறையாண்மையை விரிவு செய்வதற்காக போன்ற காரணங்களுக்காக தனது தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
    • தேவகிரியின் பெயரை தௌதலாபாத் என்று பெயர் மாற்றம் செய்தார்.
    • டெல்லி மற்றும் தௌலதாபாத் இடைப்பட்ட தூரம் 1500 கிலோமீட்டர்
    • 40 நாட்கள் மக்கள் நடந்தே சென்றனர்
    • தனது திட்டம் தவறானது என்பதை தாமதமாக உணர்ந்த சுல்தான் மக்கள் அனைவரையும் மீண்டும் தில்லிக்கே திரும்புமாறு கட்டளையிட்டார்
    • மொராக்கா நாட்டுப் பயணி இபின் பதுதா முகமது பின் துக்ளக்கோடு டெல்லி திரும்பிய போது “டெல்லியை காலியாக கைவிடப்பட்டதாக இருந்தது” என்று கூறினார்
  • அடையாள நாணயம் வெளியிடல்
    • அடையாள நாணய முறையை காகிதப் பணம் சீன மன்னன் குப்லாய் கான் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்
    • இந்தியாவில் அடையாள நாணய முறையை பரிசோதனை முயற்சியாக முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்தினார்
    • இவர் செப்பு நாணயங்களையே அடையாள பணமாக வெளியிட்டார் ஆனால் போலி நாணயங்கள் புலங்குவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • கள்ள நாணயங்கள் நாட்டில் பெருகி ஒட்டு மொத்த வருவாய் நிர்வாகமும் சீர்குலைந்தது
    • எனவே சுல்தான் செப்பு அடையாள பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக தங்க வெள்ளி நாணயங்களை வழங்கினார்
  • தோ-ஆப் பகுதியில் வரி விதிப்பு
    • தோ ஆப் (கங்கை யமுனை) என்ற இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி.
    • கொடிய பஞ்சகாலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான அறிவிப்பினால் குடியானவர்கள் நிலங்களை விட்டுவிட்டு ஓடினர் விவசாயிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
    • விவசாயிகள் விதைகள் வாங்கவும் கிணறு வெட்டும் வேளாண்மையை பெருக்கவும் தக்காவி என்ற கடன் திட்டத்தை வழங்கினார்
    • ரூ 70 லட்சம் செலவில் 64 சதுர மைல் பரப்பில் மாதிரி பண்ணையை உருவாக்கினார்
    • திவாரி இ அமிர் கோஹி இது முகமது பின் துக்ளக் வேளாண்மைக்கு என்றே உருவாக்கிய துறை
  • கொரேசன் மற்றும் ஈராக்கை கைப்பற்றும் திட்டம்
    • ஈராக்கை கைப்பற்ற புதிதாக 3 லட்சத்தி 70 ஆயிரம் வீரர்களை சேர்த்தார்.
    • ஈராக்கின் பலம் அறிந்து அந்த திட்டத்தை ஒரு வருடம் கழித்து கைவிட்டார்.
  • மங்கோலிய தலைவன் தமிரிஷின் என்பவனுக்கு பெரும் பரிசு பொருட்களை அனுப்பி தனது நாட்டை மங்கோலிய படையெடுப்பில்  இருந்து காப்பாற்றினார். அதனால் அரசு கருவூலம் காலியானது
  • இவரது ஆட்சிக்காலத்தில் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டது
    • மதுரை சுல்தானியம் - ஹசன்ஷா (1334).
    • விஜயநகரப் பேரரசு – 1336 - ஹரிஹரர் புக்கர்.
    • பாமினி பேரரசு - 1347 ஹசன்சங்கு பாமினி
  • 1351 இல் முகமது பின் துக்ளக் நோய்வாய்ப்பட்டு இறந்தார் (குஜராத்தில் கிளர்ச்சியை ஒடுக்க சென்றபோது)
  • இருபத்தைந்து வருடம் ஆண்டார்
  • புகழ்பெற்ற மொரோக்கோ பயணி இபின் பதுதா 1334 இல் டெல்லிக்கு வருகை தந்தார் இபின் பதுதா சாபர் நமா என்ற நூலை எழுதினார்.
  • முகமது பின் துக்ளக் பற்றி 
    • முரண்களின் மொத்த கலவை என்று பரானி கூறினார். 
    • மக்களிடமிருந்து சுல்தானும் சுல்தானிடமிருந்து மக்களும் விடுதலை பெற்றனர் என கூறியவர் பதௌனி
  • முகமது பின் துக்ளக் நாணய சீர்திருத்தங்களின் இளவரசன் என்று புகழப்படுகிறான்
பெரோஷ் துக்ளக் 1351 முதல்
  • கியாசுதீன் துக்ளக் கின் இளைய சகோதரரின் மகன்.
  • கியாசுதீன் துக்ளக் ஆட்சி காலத்தில் 12,000 குதிரை வீரர்கள் கொண்ட சிறப்பு படைக்கு தலைவராக இருந்தார்.
  • பிரபுக்கள் இடமும் மதத் தலைவர்களிடம் சமரச கொள்கையைக் கடைப்பிடித்தார். அலாவுதீன் கில்ஜி யால் பறிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப தரப்பட்டது.
  • அரசு அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்திய முறையை மீண்டும் கொண்டு வந்தார்.
  • தவறு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சித்திரவதைகளை குறைத்தார்.
  • வைதிக இஸ்லாம் மதத்தை ஆதரித்தார், ஆனால் இவர் புதிய இந்து கோயில்களை கட்ட தடை விதிக்கவில்லை.
  • தனது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார்.
  • பிராமணர்கள் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஜிஸ்யா என்ற தலைவரி விதித்தார்
  • நாலு விதமான வரிகளை விதித்தார்
    • கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு 
    • கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருள் 1/5 பங்கு
    • ஜெசியா - முஸ்லிமல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி (நில வரியிலிருந்து ஜிஸியா வரியை தனியாக பிரித்து தலைவரியாக்கினார்). 
      • (குறிப்பு இந்தியாவில் ஜெசியா வரி போட்ட முதல் சுல்தான் குத்புதீன் ஐபக்.
      • ஜிஸ்யா வரியை ஒழித்தவர் அக்பர்.
      • ஜிஸ்யா வரியை மீண்டும் விதித்தவர் அவுரங்கசீப்.)
    • ஜகாத் இஸ்லாமிய சடங்குகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்
  • பொது பணிகளுக்கு முக்கியத்துவம் தந்த சுல்தான்.
  • சட்லஜ் முதல் ஹென்ஸி வரை 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டினார்.
  • யமுனையிலும் கால்வாய் வெட்டினார்.
  • நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான்.
  • இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படாத 28 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரிகளை தள்ளுபடி செய்தார்.
  • அலாவுதீன் கில்ஜியின் காலத்தைச் சேர்ந்த 30 பழைய தோட்டங்களை புனரமைத்தார் மேலும் புதிதாக 1200 தோட்டங்களை உருவாக்கினார்
  • அடிமைகளின் நலன்கள் மேல் மெய்யான அக்கறை கொண்டு அடிமைகள் நலத்துறை புதிதாக ஏற்படுத்தினார் அவரிடம் சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் அடிமைகள் இருந்தனர்
  • நாகர்கோட் மீது படையெடுத்து ஜ்வாலாமுகி ஆலய நூலகத்திலிருந்து 1300 வடமொழி சுவடுகளை கொண்டுவந்து அவைகளை பாரசீக மொழியாக்கம் செய்தார்
  • அனாதைகள் மற்றும் கைம்பெண் நலனுக்காக திவானி கைராத்
  • ஏழைப் பெண்களின் திருமண அமைப்பு திவானி கிரமத்
  • இலவச மருத்துவமனை தார் உல் பா
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தை திறந்த முதல் சுல்தான்.
  • ஏழை முஸ்லிம்களுக்கு அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.
  • பெரோஸ் துக்லக் போர்கள் எதுவும் தொடுக்கவில்லை இருப்பினும் கிளர்ச்சியை அடக்க படையெடுத்தார்.
  • தக்காண பிரச்சினைகளில் தலையிட வேண்டும் என்ற பாமினி இளவரசரின் கோரிக்கையை நிராகரித்தார்
  • டெல்லி செங்கோட்டை அருகே பிரோசாபாத் நகரம் உருவாக்கப்பட்டது
  • தற்போது உள்ள பிரோஷா கோட்லா மைதானம் இவரால் கட்டப்பட்டது
  • பிரோசாபாத், ஜான்பூர், பெரோஸ்பூர் மற்றும் ஹிசார் புதிய நகரங்களை உருவாக்கினார்
  • இவருடைய மகன் முகமது கான் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
  • பெரோஷ் துக்ளக் இடம் ஓர் அதிகாரியாக பணியாற்றியவர்  கான் இ ஜஹான்
  • கான் இ ஜஹானின் இயற்பெயர் கண்ணு
    • இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிராமணன்
    • இவர் வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பு ஒன்றின்போது சிறைபிடிக்கப்பட்டனர்.
  • பெரோஷ் துக்ளக் தில்லியில் ஒரு பெரிய மதராஸாவைக் கட்டினார். அங்கு திருக்குர்ஆன் உரை இறை தூதர் வாக்குகள் கற்பிக்கப்பட்டன என்று பராணி குறிப்பிடுகிறார்.
  • ராக்தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலை பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்தார் பெரோஷ் துக்ளக்
  • இல்துமிஷ் கட்டிமுடித்த 72.5 மீட்டர் குதும்பினாரை பெரோஷ் துக்ளக் பழுது நீக்கினார் 74 மீட்டர்
  • கிபி 1398 தைமூர் படையெடுப்பு
    • தைமூரின் இயற்பெயர்: தாமர்லைன்
    • நாடு: மத்திய ஆசியா சமர்கன் பகுதி
    • தைமூர் மற்றும் நசீருதீன் முகமது ஷா இடையே போர் தைமூர் வெற்றி
    • தைமூர் படையெடுப்பு துக்ளக் மரபிற்கு சாவு மணி அடித்த போராகும்.
    • தைமூர் இந்தியாவை விட்டு செல்லும்போது கிசிர்கான் என்பவரை ஆளுநராக்கி சென்றார்.
  • பிறகு கிசிர்கான் டெல்லியை கைப்பற்றிய சையது மரபை தோற்றுவித்தார்
சையது வம்சம் (1414 – 1451)
கிஸிர்கான்
  • தோற்றுவித்தவர் கிஸிர்கான்(சையது வம்சம்) 
  • அரச பதவிக்குரிய எந்த பட்டப் பெயரையும் சூட்டி கொள்ளாத சுல்தான்.
முபாரக் ஷா
  • யமுனை நதிக்கரையில் முபாரக்பாத்  என்ற நகரை உருவாக்கினார்.
  • டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தார்.
முகமது ஷா
  • முகமதுஷா லாகூர் ஆளுநராக இருந்த பஹ்லுல் லோடியின் உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதை வெற்றி கொண்டார்.
  • எனவே பஹ்லுல்லோடிக்கு கானிகானா என்ற பட்டம் தந்தார்.
அலாவுதீன் ஆலம் ஷா
  • இவர் திறமையற்றவர்.
  • எனவே பஹ்லுல்லோடி இவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு லோடி வம்சத்தை நிறுவினார்.
  • சையது வம்சதின் கடைசி அரசர் அலாவுதீன் ஆலம் ஷா.
  • ஆலம் ஷா
    • இவர் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து டெல்லிக்கு வெளியே சென்று மன நிறைவோடும், அமைதியாகவும் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த ஒரே சுல்தான்.
    • சையது வம்சத்தை ஆண்ட 4 சுல்தான்களின் வரலாற்றை யாஹியா பின் அஹ்மத் இயற்றிய தாரிக் இ முபாரக் ஷாகி என்ற நூல் விளக்குகிறது.
லோடி வம்சம் 1414 முதல் 1526 வரை
பஹ்லுல்லோடி
  • தோற்றுவித்தவர்: பஹ்லுல்லோடி
  • இவர் அரியணையில் அமராமல் உயர்குடியினர் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுடன் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
சிக்கந்தர் லோடி
  • 1489 ஆட்சி ஏறினார்
  • ஆக்ரா நகரை புதிதாக நிர்மாணித்து பிறகு தன் தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார் (1505).
  • லோடி வம்சம் அரசர்களின் தலைசிறந்தவர்.
  • பாரசீக கவிதைகளை குல்ருகி என்ற புனைப் பெயரை கொண்டு எழுதினார்.
  • இவர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதரஸாக்களில் ஆசிரியர்களை நியமித்தார்.
  • அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினார்.
இப்ராஹிம் லோடி
  • டெல்லி சுல்தானியத்தின் கடைசி ஆட்சியாளரின் இப்ராஹிம் லோடி.
  • பஞ்சாபின் ஆளுநராக இருந்த தௌலத்ஹான் லோடியின் மகனை கொடுமைப்படுத்தினார்.
  • எனவே தௌலத்தான் லோடி முகலாய மன்னன் பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி கடிதம் அனுப்பினார்.
  • 1526 ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடி கொல்லப்பட்டார். அத்துடன் சுமார் 320 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்த டெல்லி சுல்தானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
குறிப்பு
இஸ்லாமிய ஆட்சியின் முக்கியத்துவம்
  • இஸ்லாமியர்கள் சூறையாடல் அபகரிப்புகள் போன்றவை நடத்தி இருந்தாலும் அவர்கள் நீண்ட காலம் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மண ஏற்பு மேற்கொண்டிருந்தனர்.
  • முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுளான லட்சுமியின் உருவம் போதித்துள்ளார்.
  • பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும் நாத்திகர்களையும் பஞ்சனையில் அமரவைத்து சகல மரியாதை செய்தார்கள்.
  • இந்துக்கள் செலுத்தும் வரியை பொருத்து இந்து கோவில்கள் கட்டிக்கொள்ளவும் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டனர் பரானி குறிப்பிட்டுள்ளார்.
  • காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் நூற்புசக்கரம் போன்ற சீன கண்டுபிடிப்புகள் அரேபியர்கள் மூலமாக டெல்லி சுல்தான் காலத்தில் இந்தியாவில் அறிமுகம்.
  • மதராசா கற்றுக்கொள்கிற இடம்.
  • கலிபா முகமது கபியின் வாரிசுகள் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்
இலக்கியம்
  • நாலு லட்சம் ஈரடி செய்யுள்களை  பாரசீக கவிஞர்கள் எழுதினார்கள்
  • கோரா, சோனம் போன்ற புதிய ராகங்களையும் சிதார் என்ற இசைக்கருவியும் இவரது கண்டுபிடிப்புகள் குவாலிஸ் என்ற மெல்லிசையையும் அறிமுகப்படுத்தினார்கள்
  • பால்பனால் ஆதரிக்கப்பட்டவர்.
    • துதி இ ஹிந்த் இந்தியக் கிளி என்று புகழப்பட்டார் (அமிர் குஸ்ரு)
      • ஒன்பது வானங்கள் என்ற தனது நூலில் தன்னை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
      • மேலும் இந்த நூலில் இந்திய மக்களை இசையை இந்தியாவின் வானிலையை விலங்குகளைக் கூட போற்றுகிறார்.
      • துக்ளக் நாமா என்ற நூலை எழுதினார் “கியாசுதீன் துக்ளக் கின் எழுச்சி”
      • உலகில் உள்ள மற்ற மேம்பட்ட இசைகளை விடவும் இந்திய இசை மேம்பட்டது.
    • ஜியாவுதீன் பரானி
      • பாரசீக உரைநடையின் ஆசான்.
      • இவர் இயற்றிய கவிதை தொகுப்பு ஃபுதூ உஸ் சலாதின்
    • ஜியா நக்ஷபி
      • பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத கதைகளின் தொகுப்பு கிளி நூல் துதிநமஹ.

Comments

Post a Comment

Popular posts from this blog

சிந்துவெளி நாகரிகம் பகுதி - II

குப்தர்கள் பகுதி - I

டெல்லி சுல்தான்கள் பகுதி I