டெல்லி சுல்தான் பகுதி - II
குறிப்பு
மாலிக் கப்ஃபூர்
- தெலுங்கானா பிராந்தியத்தில் வாரங்கலின் ககாதியா ஆட்சியாளரான பிரதாபருத்ரதேவா 1309 இல் மாலிக் கஃப்பூரால் தோற்கடிக்கப்பட்டார்.
- 1310 ஆம் ஆண்டில் ஹொய்சலா ஆட்சியாளர் மூன்றாம் விரா பல்லாலா தனது பொக்கிஷங்கள் அனைத்தையும் மாலிக் கப்ஃபூர் டெல்ஹி படைகளிடம் ஒப்படைத்தார்.
- இந்தியாவின் தென் பகுதியில் உள்ள மதுரை மாலிக் கஃபூரால் சூறையாடபட்டது(1310 முதல் 1311)
- இவர் இராமேஷ்வரத்தில் மசூதியை கட்டினார்
அலாவூதீன் கில்ஜு நிர்வாக சீர்திருத்தங்கள்
- இவர் நிரந்தர இராணுவ படை ஒன்றை நிர்மானித்து அதை பராமரித்து வந்தார்.
- இவர் தனது குதிரைகளுக்கு சூடு போடும் முறை(தாக்) கொண்டுவந்தார்
- இவர் தனது படையில் உள்ள படைவீரர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயரித்துள்ளார்.(ஊழலை தடுப்பதற்காக)ஹிலியா
- இவர் துருக்கிய பிரபுகளின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டு அவர்களின் சொத்துகளை பரிமுதல் செய்தார்.
- துருகிய பிரபுகளின் குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் அனைத்தும் இவரின் அனுமதி பெற்ற நடந்தது.
- இவர் மது மற்றும் போதை போருட்களை தடைசெய்தார்.
- அது மட்டுமல்லாது சூதாட்டத்தையும் தடை செய்தார்
- இவர் நில வரிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வசூலித்தார் இராணுவ வீரர்களின் உதவியுடன்
- வரிகள் செல்வந்தர்களுக்கு கடுமையாக்கபட்டன
- ஏழைகளின் மீது வரி சுமை குறைவாகவே இருந்தது.
- இவர் தபால் துறை அறிமுகப்படுத்தினார் நாடு முழுவதும் ஒருங்கினைக்க
- முதல் சுல்தான் தனது படைவீரர்களுக்கு கொள்ளையடித்த பொருட்களை வழங்காமல் பணமாக சம்பளம் வழங்கினார்.
- முன்ஹியான் என்ற விரிவான ஒற்ற படையை நிறுவினார்(கள்ள சந்தை நிலவரத்தை கண்டுபிடிக்க)
- விற்பனை செய்யபடும் பொருட்களின் எடையில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், விற்பனையாளரின் உடலில் இருந்து சமமான சதை வெட்டப்பட்டு அவரது கண்களுக்கு முன் வீசப்பட்டது
- இந்துக்கள் மீது ஜுஸ்யா, மேய்ச்சல் வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் மீது கடுமையான முறையில் செயல்பட்டார்.
சந்தைப்படுத்தல் அமைப்பு
- சந்தையை முறைப்படுத்த திவான்-இ-ரியாசாத் மற்றும் ஷாஹானா-இ-மண்டி போன்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அனைத்து வணிகர்களும் தங்களை ஷாஹானா-இ-மண்டி அலுவலகத்தில் பதிவு செய்து தங்கள் பொருட்களை நிலையான விலையில் விற்க வேண்டும் என்று முறைப்படுத்தினார்.
குறிப்பு
- அவர் அலாய்தர்வாஸாவைக் கட்டினார், சிறி கோட்டை மற்றும் ஆயிரம் தூண்களின் அரண்மனை கட்டினார். அவர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிறந்த வெற்றியாளர் மற்றும் ஒரு சிறந்த நிர்வாகி.அவர் உறுதியான மனிதர்.
- இவர் ஷெர்ஷா சூரியின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்
- ஷெர்ஷா சூரி அலாவூதின் கில்ஜுயின் இராணுவ சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
- ஷெர்ஷா சூரியின் நில சீர்திருங்களை அக்பர் பின்பற்றினார் ஷெர்ஷா சூரி அக்பரின் முன்னோடி என்றும் அழைக்கப்படுகிறார்.
அலாவுதீனின் வாரிசுகள்
- அவர் தனது மூத்த மகன் கிஸ்ர் கானை தனது வாரிசாக பரிந்துரைத்தார்.
- அலாவுதீன் 1316 இல் இறந்தார்
- இருப்பினும், மாலிக் கபூர் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்
- ஆனால் கஃபூரின் ஆட்சி முப்பத்தைந்து நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏனெனில் அவர் துருகிய பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்டார்.
கடைசி சுல்தான் கில்ஜு வம்சத்தில் நசீர் உதின் குவஸ்ர் ஷா
துக்ளக் வம்சம் 1320 முதல் 1414 வரை
- அதன் பிறகு 1320 ஆம் ஆண்டில் மங்கோலியர்களுக்கு எதிரான பல படையெடுப்புகளில் ஈடுபட்ட ஒரு மூத்த வீரர் காசி மாலிக், கியாஸ்-உத்-தின் துக்ளக் என டெல்ஹியின் சிம்மாசனத்தில் ஏறினார்.
- கியாஸ்-உத்-தின் துக்ளக் ஆல் 1414 வரை நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.
கியசுதின் துக்ளக் (1320 முதல் 1325)
- கியசுதின் துக்ளக் அவரின் மகன் ஜுனா கானை வராங்கலுக்கு எதிரான படையெடுப்பில் ஈடுபடுத்தினார்.
- ஜுனா கான் வராங்கல் மன்னன் பத்ரபகுவை வீழ்த்தி பெரும் பொருட்செல்வத்துடன் திரும்பினார்.
- கொள்ளையடித்த பெரும் பொருட்செல்வத்தை வைத்து தான் கியாசுதீன் டெல்ஹிக்கு அருகில் துக்ளுகாபாத் என்ற நகரத்திற்கு அடித்தளம் அமைத்ததாகக் கூறப்படுகிறது
- ஜுனா கான் தனது தந்தையை கொன்று 1325 இல் முஹம்மது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் அரியணையில் ஏறினார் என்று கூறப்படுகிறது.
குறிப்பு
வராங்கல் (பத்ரபகு)
- 1309ல் மாலிக் கஃபூரின் படையெடுப்பை சந்தித்தது மற்றும்
- 1323 ல் முகமது பின் துக்ளக் ஆல் படையெடுப்பை சந்தித்தது.
இயற்பெயர்:- ஜீனாகான் (ஜான் கான்).
- 1325 இல் முகமது பின் துக்ளக் என்ற பட்டத்துடன் ஆட்சி ஏறினார்.
- சிறந்த இலக்கிய, சமய, தத்துவ, கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரே டெல்லி சுல்தான்
- இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் தனது நாடாக மாற்ற விரும்பினார்
- இவரது 5 திட்டங்களினால் மிகவும் சர்ச்சைக்குரிய மன்னராக அறியப்படுகிறார்
- தலைநகர் மாற்றம்
- மங்கோலிய படையெடுப்பில் இருந்து தலைநகரை காப்பாற்ற.
- தென்னிந்தியா மீது கட்டுப்பாட்டை உறுதிபடுத்த.
- ஒரு நாட்டின் மையத்தில் தலைநகர் இருந்தால்தான் நிர்வாக வசதிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதற்காக.
- தனது இறையாண்மையை விரிவு செய்வதற்காக போன்ற காரணங்களுக்காக தனது தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
- தேவகிரியின் பெயரை தௌதலாபாத் என்று பெயர் மாற்றம் செய்தார்.
- டெல்லி மற்றும் தௌலதாபாத் இடைப்பட்ட தூரம் 1500 கிலோமீட்டர்
- 40 நாட்கள் மக்கள் நடந்தே சென்றனர்
- தனது திட்டம் தவறானது என்பதை தாமதமாக உணர்ந்த சுல்தான் மக்கள் அனைவரையும் மீண்டும் தில்லிக்கே திரும்புமாறு கட்டளையிட்டார்
- மொராக்கா நாட்டுப் பயணி இபின் பதுதா முகமது பின் துக்ளக்கோடு டெல்லி திரும்பிய போது “டெல்லியை காலியாக கைவிடப்பட்டதாக இருந்தது” என்று கூறினார்
- அடையாள நாணயம் வெளியிடல்
- அடையாள நாணய முறையை காகிதப் பணம் சீன மன்னன் குப்லாய் கான் முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்
- இந்தியாவில் அடையாள நாணய முறையை பரிசோதனை முயற்சியாக முகமது பின் துக்ளக் அறிமுகப்படுத்தினார்
- இவர் செப்பு நாணயங்களையே அடையாள பணமாக வெளியிட்டார் ஆனால் போலி நாணயங்கள் புலங்குவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
- கள்ள நாணயங்கள் நாட்டில் பெருகி ஒட்டு மொத்த வருவாய் நிர்வாகமும் சீர்குலைந்தது
- எனவே சுல்தான் செப்பு அடையாள பணத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக தங்க வெள்ளி நாணயங்களை வழங்கினார்
- தோ-ஆப் பகுதியில் வரி விதிப்பு
- தோ ஆப் (கங்கை யமுனை) என்ற இரண்டு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி.
- கொடிய பஞ்சகாலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான அறிவிப்பினால் குடியானவர்கள் நிலங்களை விட்டுவிட்டு ஓடினர் விவசாயிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
- விவசாயிகள் விதைகள் வாங்கவும் கிணறு வெட்டும் வேளாண்மையை பெருக்கவும் தக்காவி என்ற கடன் திட்டத்தை வழங்கினார்
- ரூ 70 லட்சம் செலவில் 64 சதுர மைல் பரப்பில் மாதிரி பண்ணையை உருவாக்கினார்
- திவாரி இ அமிர் கோஹி இது முகமது பின் துக்ளக் வேளாண்மைக்கு என்றே உருவாக்கிய துறை
- கொரேசன் மற்றும் ஈராக்கை கைப்பற்றும் திட்டம்
- ஈராக்கை கைப்பற்ற புதிதாக 3 லட்சத்தி 70 ஆயிரம் வீரர்களை சேர்த்தார்.
- ஈராக்கின் பலம் அறிந்து அந்த திட்டத்தை ஒரு வருடம் கழித்து கைவிட்டார்.
- மங்கோலிய தலைவன் தமிரிஷின் என்பவனுக்கு பெரும் பரிசு பொருட்களை அனுப்பி தனது நாட்டை மங்கோலிய படையெடுப்பில் இருந்து காப்பாற்றினார். அதனால் அரசு கருவூலம் காலியானது
- இவரது ஆட்சிக்காலத்தில் பல கிளர்ச்சிகள் ஏற்பட்டது
- மதுரை சுல்தானியம் - ஹசன்ஷா (1334).
- விஜயநகரப் பேரரசு – 1336 - ஹரிஹரர் புக்கர்.
- பாமினி பேரரசு - 1347 ஹசன்சங்கு பாமினி
- 1351 இல் முகமது பின் துக்ளக் நோய்வாய்ப்பட்டு இறந்தார் (குஜராத்தில் கிளர்ச்சியை ஒடுக்க சென்றபோது)
- இருபத்தைந்து வருடம் ஆண்டார்
- புகழ்பெற்ற மொரோக்கோ பயணி இபின் பதுதா 1334 இல் டெல்லிக்கு வருகை தந்தார் இபின் பதுதா சாபர் நமா என்ற நூலை எழுதினார்.
- முகமது பின் துக்ளக் பற்றி
- முரண்களின் மொத்த கலவை என்று பரானி கூறினார்.
- மக்களிடமிருந்து சுல்தானும் சுல்தானிடமிருந்து மக்களும் விடுதலை பெற்றனர் என கூறியவர் பதௌனி
- முகமது பின் துக்ளக் நாணய சீர்திருத்தங்களின் இளவரசன் என்று புகழப்படுகிறான்
- கியாசுதீன் துக்ளக் கின் இளைய சகோதரரின் மகன்.
- கியாசுதீன் துக்ளக் ஆட்சி காலத்தில் 12,000 குதிரை வீரர்கள் கொண்ட சிறப்பு படைக்கு தலைவராக இருந்தார்.
- பிரபுக்கள் இடமும் மதத் தலைவர்களிடம் சமரச கொள்கையைக் கடைப்பிடித்தார். அலாவுதீன் கில்ஜி யால் பறிக்கப்பட்ட சொத்துக்கள் திரும்ப தரப்பட்டது.
- அரசு அலுவலர்களை பரம்பரையாக பணியமர்த்திய முறையை மீண்டும் கொண்டு வந்தார்.
- தவறு செய்தவர்களுக்கு வழங்கப்படும் சித்திரவதைகளை குறைத்தார்.
- வைதிக இஸ்லாம் மதத்தை ஆதரித்தார், ஆனால் இவர் புதிய இந்து கோயில்களை கட்ட தடை விதிக்கவில்லை.
- தனது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார்.
- பிராமணர்கள் மற்றும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கு ஜிஸ்யா என்ற தலைவரி விதித்தார்
- நாலு விதமான வரிகளை விதித்தார்
- கரோஜ் - விளைச்சலில் 1/10 பங்கு
- கம்ஸ் - போர்களில் கைப்பற்றிய பொருள் 1/5 பங்கு
- ஜெசியா - முஸ்லிமல்லாதவர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி (நில வரியிலிருந்து ஜிஸியா வரியை தனியாக பிரித்து தலைவரியாக்கினார்).
- (குறிப்பு இந்தியாவில் ஜெசியா வரி போட்ட முதல் சுல்தான் குத்புதீன் ஐபக்.
- ஜிஸ்யா வரியை ஒழித்தவர் அக்பர்.
- ஜிஸ்யா வரியை மீண்டும் விதித்தவர் அவுரங்கசீப்.)
- ஜகாத் இஸ்லாமிய சடங்குகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்
- பொது பணிகளுக்கு முக்கியத்துவம் தந்த சுல்தான்.
- சட்லஜ் முதல் ஹென்ஸி வரை 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் வெட்டினார்.
- யமுனையிலும் கால்வாய் வெட்டினார்.
- நீர்ப்பாசன வரி விதித்த முதல் சுல்தான்.
- இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படாத 28 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு வரிகளை தள்ளுபடி செய்தார்.
- அலாவுதீன் கில்ஜியின் காலத்தைச் சேர்ந்த 30 பழைய தோட்டங்களை புனரமைத்தார் மேலும் புதிதாக 1200 தோட்டங்களை உருவாக்கினார்
- அடிமைகளின் நலன்கள் மேல் மெய்யான அக்கறை கொண்டு அடிமைகள் நலத்துறை புதிதாக ஏற்படுத்தினார் அவரிடம் சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் அடிமைகள் இருந்தனர்
- நாகர்கோட் மீது படையெடுத்து ஜ்வாலாமுகி ஆலய நூலகத்திலிருந்து 1300 வடமொழி சுவடுகளை கொண்டுவந்து அவைகளை பாரசீக மொழியாக்கம் செய்தார்
- அனாதைகள் மற்றும் கைம்பெண் நலனுக்காக திவானி கைராத்
- ஏழைப் பெண்களின் திருமண அமைப்பு திவானி கிரமத்
- இலவச மருத்துவமனை தார் உல் பா
- வேலைவாய்ப்பு அலுவலகத்தை திறந்த முதல் சுல்தான்.
- ஏழை முஸ்லிம்களுக்கு அறக்கட்டளையை ஏற்படுத்தினார்.
- பெரோஸ் துக்லக் போர்கள் எதுவும் தொடுக்கவில்லை இருப்பினும் கிளர்ச்சியை அடக்க படையெடுத்தார்.
- தக்காண பிரச்சினைகளில் தலையிட வேண்டும் என்ற பாமினி இளவரசரின் கோரிக்கையை நிராகரித்தார்
- டெல்லி செங்கோட்டை அருகே பிரோசாபாத் நகரம் உருவாக்கப்பட்டது
- தற்போது உள்ள பிரோஷா கோட்லா மைதானம் இவரால் கட்டப்பட்டது
- பிரோசாபாத், ஜான்பூர், பெரோஸ்பூர் மற்றும் ஹிசார் புதிய நகரங்களை உருவாக்கினார்
- இவருடைய மகன் முகமது கான் தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்
- பெரோஷ் துக்ளக் இடம் ஓர் அதிகாரியாக பணியாற்றியவர் கான் இ ஜஹான்
- கான் இ ஜஹானின் இயற்பெயர் கண்ணு
- இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிராமணன்
- இவர் வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானிய படையெடுப்பு ஒன்றின்போது சிறைபிடிக்கப்பட்டனர்.
- பெரோஷ் துக்ளக் தில்லியில் ஒரு பெரிய மதராஸாவைக் கட்டினார். அங்கு திருக்குர்ஆன் உரை இறை தூதர் வாக்குகள் கற்பிக்கப்பட்டன என்று பராணி குறிப்பிடுகிறார்.
- ராக்தர்பன் என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலை பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்தார் பெரோஷ் துக்ளக்
- இல்துமிஷ் கட்டிமுடித்த 72.5 மீட்டர் குதும்பினாரை பெரோஷ் துக்ளக் பழுது நீக்கினார் 74 மீட்டர்
- கிபி 1398 தைமூர் படையெடுப்பு
- தைமூரின் இயற்பெயர்: தாமர்லைன்
- நாடு: மத்திய ஆசியா சமர்கன் பகுதி
- தைமூர் மற்றும் நசீருதீன் முகமது ஷா இடையே போர் தைமூர் வெற்றி
- தைமூர் படையெடுப்பு துக்ளக் மரபிற்கு சாவு மணி அடித்த போராகும்.
- தைமூர் இந்தியாவை விட்டு செல்லும்போது கிசிர்கான் என்பவரை ஆளுநராக்கி சென்றார்.
- பிறகு கிசிர்கான் டெல்லியை கைப்பற்றிய சையது மரபை தோற்றுவித்தார்
சையது வம்சம் (1414 – 1451)
கிஸிர்கான்
- தோற்றுவித்தவர் கிஸிர்கான்(சையது வம்சம்)
- அரச பதவிக்குரிய எந்த பட்டப் பெயரையும் சூட்டி கொள்ளாத சுல்தான்.
முபாரக் ஷா
- யமுனை நதிக்கரையில் முபாரக்பாத் என்ற நகரை உருவாக்கினார்.
- டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தார்.
முகமது ஷா
- முகமதுஷா லாகூர் ஆளுநராக இருந்த பஹ்லுல் லோடியின் உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதை வெற்றி கொண்டார்.
- எனவே பஹ்லுல்லோடிக்கு கானிகானா என்ற பட்டம் தந்தார்.
- இவர் திறமையற்றவர்.
- எனவே பஹ்லுல்லோடி இவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு லோடி வம்சத்தை நிறுவினார்.
- சையது வம்சதின் கடைசி அரசர் அலாவுதீன் ஆலம் ஷா.
- ஆலம் ஷா
- இவர் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து டெல்லிக்கு வெளியே சென்று மன நிறைவோடும், அமைதியாகவும் முப்பது ஆண்டுகள் வாழ்ந்த ஒரே சுல்தான்.
- சையது வம்சத்தை ஆண்ட 4 சுல்தான்களின் வரலாற்றை யாஹியா பின் அஹ்மத் இயற்றிய தாரிக் இ முபாரக் ஷாகி என்ற நூல் விளக்குகிறது.
லோடி வம்சம் 1414 முதல் 1526 வரை
பஹ்லுல்லோடி
- தோற்றுவித்தவர்: பஹ்லுல்லோடி
- இவர் அரியணையில் அமராமல் உயர்குடியினர் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுடன் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
- 1489 ஆட்சி ஏறினார்
- ஆக்ரா நகரை புதிதாக நிர்மாணித்து பிறகு தன் தலைநகரை டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார் (1505).
- லோடி வம்சம் அரசர்களின் தலைசிறந்தவர்.
- பாரசீக கவிதைகளை குல்ருகி என்ற புனைப் பெயரை கொண்டு எழுதினார்.
- இவர் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மதரஸாக்களில் ஆசிரியர்களை நியமித்தார்.
- அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினார்.
இப்ராஹிம் லோடி
- டெல்லி சுல்தானியத்தின் கடைசி ஆட்சியாளரின் இப்ராஹிம் லோடி.
- பஞ்சாபின் ஆளுநராக இருந்த தௌலத்ஹான் லோடியின் மகனை கொடுமைப்படுத்தினார்.
- எனவே தௌலத்தான் லோடி முகலாய மன்னன் பாபரை இந்தியா மீது படை எடுத்து வரும்படி கடிதம் அனுப்பினார்.
- 1526 ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடி கொல்லப்பட்டார். அத்துடன் சுமார் 320 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்த டெல்லி சுல்தானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
குறிப்பு
இஸ்லாமிய ஆட்சியின் முக்கியத்துவம்
- இஸ்லாமியர்கள் சூறையாடல் அபகரிப்புகள் போன்றவை நடத்தி இருந்தாலும் அவர்கள் நீண்ட காலம் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மண ஏற்பு மேற்கொண்டிருந்தனர்.
- முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுளான லட்சுமியின் உருவம் போதித்துள்ளார்.
- பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும் நாத்திகர்களையும் பஞ்சனையில் அமரவைத்து சகல மரியாதை செய்தார்கள்.
- இந்துக்கள் செலுத்தும் வரியை பொருத்து இந்து கோவில்கள் கட்டிக்கொள்ளவும் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டனர் பரானி குறிப்பிட்டுள்ளார்.
- காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் நூற்புசக்கரம் போன்ற சீன கண்டுபிடிப்புகள் அரேபியர்கள் மூலமாக டெல்லி சுல்தான் காலத்தில் இந்தியாவில் அறிமுகம்.
- மதராசா கற்றுக்கொள்கிற இடம்.
- கலிபா முகமது கபியின் வாரிசுகள் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர்
இலக்கியம்
- நாலு லட்சம் ஈரடி செய்யுள்களை பாரசீக கவிஞர்கள் எழுதினார்கள்
- கோரா, சோனம் போன்ற புதிய ராகங்களையும் சிதார் என்ற இசைக்கருவியும் இவரது கண்டுபிடிப்புகள் குவாலிஸ் என்ற மெல்லிசையையும் அறிமுகப்படுத்தினார்கள்
- பால்பனால் ஆதரிக்கப்பட்டவர்.
- துதி இ ஹிந்த் இந்தியக் கிளி என்று புகழப்பட்டார் (அமிர் குஸ்ரு)
- ஒன்பது வானங்கள் என்ற தனது நூலில் தன்னை ஓர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
- மேலும் இந்த நூலில் இந்திய மக்களை இசையை இந்தியாவின் வானிலையை விலங்குகளைக் கூட போற்றுகிறார்.
- துக்ளக் நாமா என்ற நூலை எழுதினார் “கியாசுதீன் துக்ளக் கின் எழுச்சி”
- உலகில் உள்ள மற்ற மேம்பட்ட இசைகளை விடவும் இந்திய இசை மேம்பட்டது.
- ஜியாவுதீன் பரானி
- பாரசீக உரைநடையின் ஆசான்.
- இவர் இயற்றிய கவிதை தொகுப்பு ஃபுதூ உஸ் சலாதின்
- ஜியா நக்ஷபி
- பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத கதைகளின் தொகுப்பு கிளி நூல் துதிநமஹ.
Tq sir .. part 3 irukkutha?
ReplyDeleteSir next notes podunga sir
ReplyDeleteNext hints podunga sir
ReplyDelete