சிந்துவெளி நாகரிகம் பகுதி - II

ஹரப்பா மக்களின் வாழ்க்கை முறை 

நகர திட்டமிடல்

இரண்டு அடுக்குகளை கொண்ட நகர அமைப்பு 

மேல் நகர அமைப்பு (மேற்கு பகுதி)

  • உயரமான பகுதி 
  • கோட்டைகள் 
  • நிர்வாகிகள் தங்கும் இடம்
  • பெருங்குளம் மற்றும் தானியக் காளஞ்சியம் காணப்பட்டது

 கீழ் நகர அமைப்பு (கிழக்கு பகுதி)

  • தாழ்வான பகுதி மற்றும் மிக பெரிய பரப்பளவு கொண்டது
  • சாதாரண மக்கள் வசிக்கும் இடம்

(கோட்டைகள் இல்லாத சிந்துவெளி நகர பகுதி சங்குதாரோ)

மூன்று அடுக்குகளை கொண்ட நகர அமைப்பு குஜராத்தில் உள்ள தோலவிராவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது

  • முதல் அடுக்கில் கோட்டைகள் 
  • இரண்டம் அடுக்கில் விளையாட்டு அரங்கம் அல்லது தடுப்பணை இருந்திருக்கலாம்
  • மூன்றாவது அடுக்கில் சாதாரண மக்கள்

வீடுகள் மற்றும் தெருக்கள்

  • வீடுகளில் ஜன்னல்கள் இல்லை முற்றத்தின் வெளிச்சம் மற்றும் கற்றோட்டாமே போதுமானதாக இருந்தது
  • சிறிய தெருகள் 9 முதல் 12 அடி அகலம்
  • பெரிய தெருகள் 33 அடி அகலம்
  • தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
  • தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன.
  • அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன, ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
  • சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளைக் கொண்டதாகவும் இருந்தன
  • வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்படுகின்றன.
  • பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும், ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. 
  • ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
  • வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டிருந்தன. சூரிய வெப்பத்தில் உலர வைக்கப்பட்ட செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.
  • பெரும்பாலான செங்கற்கள் சீரான அளவுகள் உடையதாகவே இருந்தன. கூரைகள் சமதளமாக இருந்தன.
  • அரண்மனைகளோ, வழிபாட்டுத் தலங்களோ இருந்ததை தீர்மானிக்கப் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கழிவு நீர் வடிகால் அமைப்பு

  • ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது.
  • வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
  • கழிவு நீர் வடிகால் சுத்தம் செய்ய சீரான இடைவெளிகளில் துளைகள் அமைக்கப்பட்டிருந்தன
  • கழிவு நீர் வடிகால் மென் சரிவை கொண்டுள்ளது

பொருளாதார வாழ்க்கை

  • வேளாண்மை முக்கிய தொழிலாக இருந்தது
  • இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்
  • ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தினார்கள். நிலத்தை உழுது, விதைக்கும் வழக்கத்தை அவர்கள் கொண்டிருந்திருக்கலாம் உழுத நிலங்களைக் காலிபங்கனில் காண முடிகிறது இராஜஸ்தான் மாநிலம்
  • பாசனத்துக்காக கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்
  • ஹரப்பா மாடுகளை ஜெபு என அழைக்கப்பட்டது
  • குதிரைகள் பற்றி தெரியவில்லை
  • கரும்பு பற்றியும் தெரியவில்லை
  • சிந்து வெளி மக்கள் உலகத்திற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பருத்தி
  • கிரேக்க மக்கள் பருத்தியை சிந்தொன் என்று அழைக்கிறார்கள்
  • வேளாண்மை முக்கிய தொழில் 
  • பொற்கொல்லர்கள் இருந்திகிறார்கள்
  • படகு செய்பவர்கள்
  • நெசவாளர்கள் 
  • சுடுமண் பொம்மைகள் செய்பவர்கள் ஆகியோர்கள் இருந்திருக்கிறார்கள்
  • வேட்டையாடுதல் மற்றும் எருது சட்டை அவர்களின் பொழுதுப்போக்கு

கால்நடை வளர்ப்பு 

  • ஆடு மாடு கோழி ஆகியவற்றை வளர்த்தனர்
  • காட்டுப் பன்றி மான் மற்றும் முதலை இருந்ததார்கான சான்று உள்ளது
  • சிந்துவெளி நாகரிக முத்திரைகளில் செபு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது

ஆடை வகைகள்

  • சிந்துவெளி மக்கள் பருத்தி, கம்பளி, நார்ப்பட்டு ஆகியவற்றால் ஆன ஆடைகளை அணிந்தனர், மேலாடை, கீழாடை என முழு ஆடைகளையே அணிந்தனர்.
  • பருத்தி ஆடைகள் பெரும்பாலும் வண்ணங்களுடனும் பூ வேலைப்பாடுகளுடனும் இருந்தன.
  • கம்பளி ஆடைகள் தடித்திருந்தன.
  • நார்ப்பட்டாடை உடலோடு ஒட்டி, ஒளி ஊடுருவுமாறு இருந்தது.
  • கழுத்துப் பட்டையுடைய சட்டைகளையும், பொத்தான் தைத்த சட்டைகளையும் இவர்கள் அணிந்திருந்தனர்.
  • ஆண், பெண் இருபாலரும் மங்கோலியரைப் போல் தலையில் முண்டாசு கட்டி கொண்டனர்

முக்கியமான கைவினை பொருட்கள்

  • மணிகள் மற்றும்  அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல் உலோக வேலைகள்

அணிகலன் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

  • கார்ணிலியன் சிவப்பு மணிகள்
  • படிகக்கல்
  • நுரைக்கல்
  • சுண்ணாம்பு கல்
  • செம்பு வெள்ளி தங்கம் வெண்கலம் 

இரும்பின் பயன் தெரியாது

  • சங்கு
  • பீங்கான்
  • டெரகோட்டா மற்றும் சுட்ட செங்கற்கள்

கைவினைத் தயாரிப்புகளுக்கான முக்கிய மையம்

பொருள்                             நகரம்

சங்கு                         நாகேஷ்வர்,பாலகோட்

வைடூரியம்                 ஷார்டுகை

கார்னிலியன்                 லோத்தல்

ஸ்டீட்டைட்(நுரைகல்) தெற்கு ராஜஸ்தான்

செம்பு                         ராஜஸ்தான், ஓமன்

  • பொருட்கள் மெசபட்டோமியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
  • சிந்துவெளி பொருட்கள் மெசபட்டோமியாவில் கிடைக்கப்பெற்றது

பெண்கள் நிலை மற்றும் அழகுசாதன பொருட்கள்

பெண்களின் நிலை

  • சிந்துவெளியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் மதிக்கப்பட்டனர்.
  • இவர்கள், அழகு சாதனப்பொருள்களைப் பயன்படுத்தினர்.
  • அதற்குச் சான்றாக வெண்கலத்தால் ஆன முகம் பார்க்கும் கண்ணாடிகள், தந்தத்தால் செய்யப்பட்ட சீப்புகள் போன்ற பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன.
  • மேலும், இப்பெண்கள் காதணி, கைவளையல், மோதிரம், காலில் காப்பு, கழுத்தில் அட்டிகை, கழுத்துமணிகள் போன்ற பல அணிகலன்களையும் அணிந்திருந்தனர்.

வணிகம் மற்றும் பண்டமாற்று முறை

  • பாண்டமாற்று முறை வணிக மூலமாக இருந்தது
  • மெசப்படோமியாவுடன் நெருங்கிய வணிக தொடர்பு இருந்தது
  • ஹரப்பா முத்திரைகள் சுமேரிய நகரத்தில் கண்டெடுக்கப்பட்டது
  • தற்போது உள்ள ஓமன், பக்ரைன், ஈரான், ஈராக் ஆகிய பகுதிகள் 
  • ஹரப்ப ஜாடி ஒன்று ஓமனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
  • உள்நாட்டு வணிகத்திற்கு மாட்டு வண்டிகள் உபயோகப்படுத்தப்பட்டது
  • வெளிநாட்டு வணிகத்திற்கு கடல் பயணம் மேற்கொண்டனர் லோத்தல் துறைமுகம் பயன்படுத்தப்பட்டது
  • கியூனிபார்ம் கல்வெட்டுகள் ஹரப்ப மற்றும் சுமேரியர்களுக்கு இடையே வணிக தொடர்பை காட்டுகிறது
  • சிந்துவெளி பகுதியை மெலுகா என்று குறிப்பிடப்பட்டுள்ளது
  • நரம் சின் அக்காடிய பேரரசர்(சுமேரியர்) மெலுக்காவில் இருந்து ஆபாரணங்களை வாங்கியதாக குறிப்பு எழுதியுள்ளர்

கியூனிபார்ம் எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர்கள் சுமேரியர்கள் (உலகின் மிக பழமையான எழுத்து முறை)

மட்பாண்டங்கள்

  • ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
  • அவை நன்கு சுடப்பட்டவை, மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கறுப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தது அரசு இலைகள், மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல்மாணலான கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ள மட்பாண்டங்கள்
  • ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்டதாகவும் இருக்கின்றன.

ஆயுதங்கள்

  • அம்பு ஈட்டிகள் கைக்கோடாரிகள் ஆகியன பயன்படுத்தப்பட்டன
  • ரோரி செர்ட் இந்தப் படிகக்கல் பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது ஹரப்பா மக்கள் கத்திகளும் பிற கருவிகளும் செய்வதற்கு இது பயன்பட்டது.

எடைக்கற்களும் அளவீடுகளும்

  • ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
  • வணிகப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதால், முறையான அளவீடுகளுக்கான தேவையிருந்தது
  • ஹரப்பா நாகரிகப்பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. 
  • எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது
  • 1:2:4:8:16:32 இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
  • ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் = 1.75செ.மீ ஆகக் கொள்ளும்விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • எடைக்கற்கள் கனசதுர வடிவத்தில், படிகக்கல்லில் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இரும எண் முறையை (1,2,4,8,16,32..) பின்பற்றினார்கள். இம்முறையில் அணிகலன்களையும் உலோகங்களையும் எடை போடப் பயன்படுத்தியிருக்கலாம்
  • தந்ததினால் ஆன அளவு கோல் லோத்தல் (1704மிமி)

மருத்துவம்

  • சிந்துவெளி மக்கள் கண், காது, தொண்டை, தோல் தொடர்பான நோய்களுக்குப் கட்டில் என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்.
  • மான், காண்டாமிருகத்தின் எலும்புகள், பவளங்கள், வேப்பந்தழைகள் போன்றவை மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

(தமிழகத்தில், இன்றும் மருத்துவத்திற்கு வேப்பந்தழை பயன்படுவது குறிப்பிடத்தக்கது.)

அரசியலமைப்பு

  • மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள் ஆகியவற்றில் காணப்படும் சீரான தன்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது. தீவிரமான வணிக நடவடிக்கைகளுக்குத் தொழிலாளர்களைத் திரட்ட வேண்டிய தேவை இருந்திருக்கும்
  • அதிகாரம் படைத்த ஆட்சியமைப்பால் இத்தேவை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.
  • ஹரப்பாவும் மொஹஞ்சதாரோவும் நகர அரசுகளுக்கான ஆட்சியமைப்பின் கீழ் இயங்கியிருக்கலாம்.
  • பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

வழிபாட்டு முறை

  • சிவனின் வடிவம் (பசுபதி) உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கிடைக்கப்பெற்றது
  • பசுபதி முத்திரை சதுர வடிவம் கொண்டது
  • பசுபதி தியான வடிவில் அமர்ந்திருப்பது போல் காட்சியளிக்கும்
  • யானை புலி காண்டாமிருகம், எருது ஆகிய விலங்குகளும் பொறிக்கப்பட்டிருந்தான
  • பாததில் மாண் பொறிக்கப்பட்டுள்ளது
  • மூன்று முகம் இரண்டு கொம்புகள் ஆகியவை பசுபதி முத்திரைகளில் காணப்பட்டன
  • பெண்தெய்வ வழிபாடு முறையும் இருந்தது
  • இயற்கையை வழிபாடு முறை அரச மரம் வழிபாடு மற்றும்
  • பாம்பு வழிபாடு
  • சூலாயுதம் மற்றும் ஆற்றுவணக்கம் அல்லது நீர் வழிபாடும் இருந்தன

(தமிழகத்தில் வேப்ப மரம் பெண் கடவுள் அரச மரம் ஆண் கடவுளாகவும் வணங்கப்படுவது குறிப்பிடதக்கது)

  • லிங்க வழிபாடு முறை இருந்திருக்கிறது
  • நெருப்பு குண்டம் கலிபங்கனில் கண்டெடுக்கப்பட்டது விரிவான சடங்கு முறைகள் பின்பற்றியிருக்கலாம்.
  • இறப்பிற்கு பிறகான வாழ்க்கை முறை நம்பிக்கை இருந்தது
  • அவர்கள் தாயத்துகள் உபயோகப்படுத்தினார்கள் (ஆவிகள் பயம் காரணமாக)

எழுத்துமுறை 

  • சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள சித்திர எழுத்துகள் சிந்துவெளி மக்களின் மொழிக்குரிய எழுத்துகளாகும்.
  • இந்த எழுத்துகள் இடமிருந்து வலமாக ஒரு வரியும், வலமிருந்து இடமாக மற்றொரு வரியாகவும் எழுதப்பட்டுள்ளன.
  • சிந்து வெளி எழுத்துமுறைகளை திரவிட எழுத்து முறைகளுடன் ஒப்பிட்வர் பார்போலா குழு ஸ்காண்டிநேவியவை சார்ந்தவர்கள்
  • சிந்துவெளி நாகரித்தை திரவிட நாகரிகத்தோடு ஒப்பிட்டவர் பானர்ஜு

இறந்தவர்களை புதைக்கும் வழக்கம்

மொகஞ்தாரோவில் மூன்று வகையான முறை இருந்தது

  • முழு உடலை புதைத்தல்
  • எழும்புகளை புதைக்கும் முறை 
  • எரித்தலுக்கு பிறகு புதைத்தல்

ஹரப்பாவில் மரத்தினால் ஆன சவப்பெட்டிகளில் புதைத்தனர்

மட்பாண்டங்களில் வைத்து புதைக்கு மரபு லோத்தலில் இருந்தது

சதி இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை

சிந்துவெளி நாகரிகத்தின் அழிவு

  • சிந்துவெளி நாகரிகம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால், வெள்ளப் பெருக்கினால் அழிந்திருக்கலாம்
  • அங்குக் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு அழிந்திருக்க வாய்ப்பிருக்கிறது
  • வரலாற்று ஆசிரியர் கிருஷ்ணா ரெட்டி என்பாரின் கூற்றுப்படி ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் மிகப்பெரிய வணிகத்தலங்களாக இருந்துள்ளன. இங்குப் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, நகரங்களை விட்டு மக்கள் 
  • சிந்துநதி தன்போக்கை மாற்றிக் கொண்டதால், கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் அந்நகரங்களிலிருந்து வெளியேறி இருக்கலாம்
  • மொகஞ்சதரோவில் கிடைத்துள்ள மண்டை ஓடுகளில் காணப்பட்டுள்ள வெட்டுக் காயங்களின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரின் கருத்துப்படி, ஆரியர் படையெடுப்பினால் இந்நாகரிகம் முற்றிலும் அழிந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

Comments

Popular posts from this blog

குப்தர்கள் பகுதி - I

டெல்லி சுல்தான்கள் பகுதி I