குப்தர்கள் பகுதி - I
குப்தர்கள்
- மௌரியர்களுக்கு பிறகு வலிமையான பேரரசு குப்த பேரரசு இந்தியாவில்
- குப்தர்களின் தலைநகரம் பாடலிபுத்திரம்
- அலுவலக மொழி சமஸ்கிருதம்
- மக்களின் மொழி பிராகிருதம்
- வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள்
குப்தர்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் சான்றுகள்
மூன்று முக்கிய சான்றுகள்
- இலக்கியம்
- கல்வெட்டு சான்றுகள்
- நாணயங்கள்
இலக்கிய சான்றுகள்
- அரசருக்குக் அறிவுரை கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாஸ்திரம்(பொ.ஆ. 400) (கருவூலத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது)
- விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.(இது மௌரியர்களை பற்றிய குறிப்பிடுகிறது முத்ராராட்சசம்) இரண்டாம் சந்திரகுப்தரின் காலம்
- புத்த மற்றும் சமண இலக்கிய நூல்கள்
- காளிதாசர் படைப்புகள்
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்
கல்வெட்டு சான்றுகள்
மெஹருல்லி இரும்பு தூண்
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் நிறுவப்பட்டது
- முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை பட்டியலிடுகிறது
அலகாபாத் கல் தூண் (சமுத்திர குப்தரின் வெற்றி குறித்தது)
- சமுத்திர குப்தரின் சாதனைகளை விளக்குகிறது
- பிரேய பிரஸஸ்சி (புகழ் பாடுதல்) அல்லது மெய்கீர்த்தி
- அசோகர் காலத்தில் நிறுவப்பட்டது
- அலகாபாத் கல் தூண் ஹரிசேனாரால் எழுதப்பட்டது
- சமுத்திர குப்தரின் அவைக்கள புலவர் ஹரிசேனர்
- 33 வரிகள்
- சமஸ்கிருத மொழி
- வரிவடிவம் தேவ நாகரி
நாணயங்கள்
- குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- இந்தத் தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
- குப்தர்களின் தங்க நாணயங்கள் தினார் என்று அழைக்கப்பட்டது
- தங்க நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்திலிருந்தது
- இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி நாணயங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்
- பணவியல் கொள்கை சமுத்திர குப்தர் காலத்தில் கொண்டு வரப்பட்டது
- பெரும்பாலான நாணயங்களிள் அரசரின் கையில் வில் உள்ளது போன்று பொறிக்கப்பட்டுள்ளது
குப்தர்களின் அடித்தளம்
- ஸ்ரீ குப்தர் (240 முதல் 280) பொ.ஆ. குப்த வம்சத்தை நிறுவினார்
- தற்போதைய வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை ஆட்சி செய்தவர்
- நாணயங்களில் இடம்பெற்ற முதல் குப்தா ஆட்சியாளர் ஸ்ரீகுப்தர்.
- அவருக்குப் பிறகு அவரது மகன் கட்டோட்கஜன் ஆட்சி செய்தார் (280 முதல் 319) பொ.ஆ
- இவர்கள் இருவரையும் கல்வெட்டுகளில் மகாராஜாக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
குப்த அரசர்கள்
- ஸ்ரீகுப்தர் (240 - 280)பொ.ஆ.
- கடோத்கஜன் (280 - 319)பொ.ஆ.
- முதலாம் சந்திரகுப்தர் (மூன்றாவது குப்த அரசர்)
- சமுத்திர குப்தர்
- (ராம குப்தர் சமுத்திர குப்தரின் மூத்த மகன்)
- இரண்டாம் சந்திர குப்தர்
- குமார குப்தர்
- ஸ்கந்த குப்தர் (குப்தர்கள் அரசு சரிய தொடங்கியது இவரின் காலத்தில் தான்)
- கடைசி குப்தர் அரசர் விஷ்ணு குப்தர்
முதலாம் சந்திர குப்தர் (319 முதல் 335 CE)
- குப்தா பேரரசின் முதல் முக்கிய பெரிய அரசராக கருதப்படுகிறார்
- மாஹாராஜாதி ராஜா என்ற பட்டம் சூட்டிக்கொண்டார்
- முதலாம் சந்திரகுப்தர் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணந்தார்
- அவரது முடிசூட்டு விழா கி.பி 320இல் நடைபெற்றது(குப்த சகாப்தத்தின் தொடக்கம்)
- அவர் வெளியிட்ட தங்க நாணயங்களில் முதலாம் சந்திர குப்தரின் உருவம் மற்றும் குமாரதேவியை குறிக்கும் வகையில் லிச்சாவிய என்றும் பொறிக்கப்பட்டள்ளது
- லிச்சாவி என்பது ஒரு மிக பழைமையான கண சங்கம் மற்றும் அதன் பிரதேசம் தற்போது உள்ள கங்கை சமவெளி மற்றும் நேபால் தேராய்க்கும் இடையில் இருந்த பகுதி மக்கள்.
- நாணயத்தில் பொறிக்கப்பட்ட முதல் பெண் அரசியின் உருவம் லிச்சாவி (குமார தேவி)
- மெஹரிரு இரும்பு தூண் இவரின் சாதனைகள் பற்றி விளக்குகிறது
சமுத்திர குப்தர் 335 முதல் 375 CE வரை)
- குப்த வம்சத்தில் மிகச் சிறந்த அரசர் சமுத்திர குப்தர்
- முதலாம் சந்திரகுப்தரின் மகன் சமுத்திர குப்தர்
- அலகாபாத் தூண் கல்வெட்டு என்பது சமுத்திர குப்தரின் ஆட்சிக்கான சான்றுகளுக்கு முக்கிய ஆதாரமாகும்
- இவர் இந்திய நெப்போலியன் என்று வி.ஏ. ஸ்மித் என்பவரால் அழைக்கப்படுகிறார்
- கவி பாடும் திறனால் இவர் கவிராஜா என்றும் அழைக்கப்படுகிறார்
- மெய் கீர்த்தி(புகழ்பாடுதல்) எழுதியவர் சமுத்திர குப்தரின் அவைகல புலவர் ஹரிசேனர்
இந்த மெய்கீர்த்தி (அலாகாபாத் கல்தூணின் குறிப்புகளை) மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்
- 9 வட இந்திய மன்னர்கள் மற்றும்
- 12 தென் இந்திய மன்னர்களை வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
மெய்கீர்த்தியின் பகுதிகள்
முதல் பகுதியில் இரண்டு வட இந்திய மன்னர்கள் வீழ்த்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
- அச்சுதன் மற்றும் நாகபாணர் ஆகியோரை பற்றி முதல் பகுதி விளக்குகிறது
இரண்டாம் பகுதி
- தக்சிணாபாதம் படையெடுப்பு
- தென்னிந்திய படையெடுப்பு பற்றி குறிப்புகள் தக்சிணபாதம் என்று அழைக்கப்படுகிறது
- இவர் 12 தென் இந்திய அரசர்களை வீழ்த்தினார்
- இதில் ஒரு பல்லவ அரசர் விஷ்ணு கோபன்
மூன்றாம் பகுதி
- மீதியுள்ள 7 வட இந்திய மன்னர்களை வீழ்தியது பற்றிய குறிப்பு
(இவர் வீழ்த்திய வட இந்திய அரசர்களில் பெரும்பாலானோர்கள் நாக வம்சத்தை சார்ந்தவர்கள்)
- தென் இந்தியவில் பல்லவ அரசன் விஷ்ணு கோபனை வெற்றி பெற்ற பிறகு வரி மட்டும் வசூலிக்கப்பட்டது
பிற வெற்றிகள்
- தேவபுத்திர சகானுஷாகி என்ற குஷாண வம்சத்தை சார்ந்த மன்னரை சமுத்திர குப்தர் தோற்கடித்தார்
- (குஷாணர்கள் சீனாவை சார்ந்த யூச்சி வம்சத்தை சார்ந்தவர்)
குறிப்பு
- சாகர்களை(மேற்கு இந்திய பகுதி) வீழ்த்தவில்லை
- பாஞ்சாபும் இவரின் எல்லைக்கு வெளியே இருந்தது
- குப்தர் வம்ச அழிவுக்கு காரணம் ஹீணர்கள்
- சமுத்திரகுப்தரின் அதிகாரம் பழங்குடி குடியரசுகளின் அதிகாரத்தை உடைத்தது, இது ஹீணர்களின் மீண்டும் மீண்டும் படையெடுப்புகளுக்கு வழிவகுத்தது
- ஹீணர்கள் மத்திய ஆசியவிலிருந்த நாடோடி பழங்குடியினர்
- வெள்ளை ஹீணர்கள் குப்த வம்ச வீழ்ச்சிக்கு காரணம்
- குஷாணர்களுடனான உறவு குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
- ஆனால் இலங்கையைப் பொருத்துவரை இலங்கை அரசர் மேகவர்மன் பரிசுகளை சமுத்திர குப்தருக்கு அனுப்பி கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
- சமுத்திர குப்தரின் சம காலத்தவர் ஸ்ரீமேகவர்மன் இலங்கை அரசர்
- அவர் தனது இராணுவ வெற்றிகளை அறிவிக்க குதிரை பலி இடும்(அஸ்சுவமேத யாகம்) சடங்கை செய்தார்.
- இவர் தீவிர வைஷ்ணவத்தை பின்பற்றுபவர், ஆனால் அதை சமயம் சிறந்த புத்த அறிஞர் வசுபந்துக்கு ஆதரவளித்தார்
- இவர் விணை வாசிப்பது போல உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டார்.
- சமுத்திர குப்தர் ஒரு விஷ்ணு பக்கராவார்
- அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல
- கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்
ராம குப்தர்
- 375 முதல் 380 வரை ராம குப்தர் ஆட்சி செய்தார்.
- இவர் சமுத்திர குப்தரின் மூத்த மகன்.
இரண்டாம் சந்திர குப்தர் (375 / 380 முதல் 415 பொ.ஆ) வரை
- அவரது தாத்தா சந்திர குப்தர் பெயர் இவருக்கு வைக்கப்பட்டது
- 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார்
- அவர் தனது சகோதரர் ராம குப்தாவுடன் அடுத்தடுத்த போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.
- அவர் தென்னிந்தியாவின் ஆட்சியாளர்களுடன் நட்புறவைப் பேணி வந்தார்.
- சமுத்திர குப்தர் மற்றும் இரண்டாம் சந்திர குப்தர் இருவரும் 40 வருடங்கள் ஆட்சி செய்தனர்
சிறப்பு பெயர்கள்(இரண்டாம் சந்திரகுப்தர்)
- விக்ராமதியர்
- நரேந்திரசந்திரா
- சிம்மசந்திரா
- நரேந்திரசிம்மா
- விக்ரமதேவராஜா
- தேவகுப்த
- தேவஸ்ரீ
சாகரி எனும் பெயரும் இருந்தது சாகர்களை அழித்தவர்.
- இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை போர்கள், திருமண உறவுகள் ஆகியனவற்றின் மூலம் விரிவுபடுத்தினார்.
- ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தக்காணப் பகுதியை ஆண்ட வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார்.
- இவரது மேற்கு இந்திய அரசுகள் மீதான படையெடுப்பின்போது,
- இத்திருமண உறவுகள் மிகவும் கூடுதல் பலம் அளித்தன.
- மேற்கு மாளவம், குஜராத் ஆகிய பகுதிகளை 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை இப்படையெடுப்பின் மூலம் இரண்டாம் சந்திரகுப்தர் வென்றார்.
- ரோமானிய சாம்ராஜ்யத்துடனான வர்த்தகத்தால் குப்த ராஜ்யம் செழிப்படைந்தது
- அவர் ஒரு சிறந்த வெற்றியாளராகவும் திறமையான நிர்வாகியாகவும் இருந்தார்
- இரண்டாம் சந்திரகுப்தர் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த ஆட்சியாளர் ஆவார்
- குப்தர்களின் மாற்று /இரண்டாம் தலைநகரம் உஜ்ஜையினி (மத்திய பிரதேசம்)
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள்
- காளிதாசர் சமஸ்கிருதப் புலவர்
- ஹரிசேனர் சமஸ்கிருதப் புலவர்
- அமர சிம்ஹர் அகராதியியல் ஆசிரியர் (புத்த மதத்தை சார்ந்தவர்)
- தன்வந்திரி மருத்துவர்
- காகபானகர் சோதிடர்
- சன்கு கட்டக் கலை நிபுணர்
- வராகமிகிரர் வானியல் அறிஞர்
- வராச்சி இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர்
- விட்டல்பட்டர் மாயவித்தைக்காரர்
பாஹியான்
- இரண்டாவது சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் புத்த துறவி ஃபஹியன் இந்தியாவுக்கு வருகை தந்தார்.
- அவரது பயணக் குறிப்புகள் குப்தர் கால மக்களின் சமூக-பொருளாதார, மத மற்றும் தார்மீக நிலைமைகள் பற்றிய தகவல்களை நமக்கு வழங்கின.
- இவரது பயண குறிப்பு போ கோகி
- இவர் 9 வருடங்கள் இந்தியாவில் தங்கினார்
- ஃபஹியனின் கூற்றுப்படி, மகத மக்கள் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருந்தனர், நீதி கடுமையாக்கபடவில்லை மற்றும் மரண தண்டனை இல்லை.
- கயா தனிமைபடுத்தப்பட்டது
- கபிலவஸ்து (புத்தர் பிறந்த ஊர்) ஒரு காடாக மாறியது, ஆனால் படாலிபுத்ராவில் மக்கள் செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள்.
மதுரா பாடலிபுத்திரம் குறித்து பாஹியான்
- மதுராவில் மக்கள் தொகை அதிகம். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை
- அரசருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும் தான் தானியத்தில் ஒரு பகுதியை அரசருக்குத் தரவேண்டும்
- சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ, கடுமையாகவோ அபராதம் விதிக்கப்பட்டது
- மீண்டும் மீண்டும் கலகம் செய்தால், குற்றமிழைத்தால், வலது கை துண்டிக்கப்படும
- நாடு முழுவதும் மக்கள் எந்த உயிரினத்தையும் கொல்வதில்லை.
- எந்த மதுபானத்தையும் அருந்துவதில்லை
- பாடலிபுத்திரத்தில் வசிப்பவர்கள் நல்ல பணக்காரர்கள்
- வசதியானவர்கள் ஈகைக் குணத்தில் ஒருவரோடொருவர் போட்டி போடுபவர்கள்
- நகரங்களில் வைசியக் குடும்பத்தினர் தர்மம் செய்வதற்கும் மருத்துவத்திற்கும் சத்திரங்களைக் கட்டியிருக்கிறார்கள்
- அனைத்து ஏழைகள், ஆதரவற்றோர், அனாதைகள், விதவைகள், குழந்தையில்லாதவர்கள், அங்கவீனர்கள், ஊனமுற்றவர்கள் என அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகளும் செய்யப்படுகின்றன.
இரண்டாம் சந்திர குப்தருக்கு பிறகு
குமார குப்தர்
- இவர் சக்ராதித்தர் என்று அழைக்கப்பட்டார்
- நாளந்த பல்கலைகழகத்தை உருவாக்கியவர்
- ஹர்சர் காலத்தில் தான் இது புகழ்பெற்றது
- யூவாங்க சுவான் நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த மதத்தைப் படிக்க பல ஆண்டுகள் கழித்தார்.
- எட்டு மிக பெரிய பாடசாலைகளும் மூன்று பெரிய நூலகங்களும் வளாகத்தில் அமைந்திருந்தன
- பக்தியார் கல்ஜியின் கீழ் மம்லூக்ஸ் (துருக்கிய முஸ்லீம்களால்) நாளந்தா பல்கலைகழகம் அழிக்கப்பட்டது.
- இன்று, இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது
- நாளந்தாவில், புத்த மதம் முக்கிய பாடமாக இருந்தது. யோகா, வேத இலக்கியம் மற்றும் மருத்துவம் போன்ற பிற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
- குமாரகுப்தாவின் வாரிசான ஸ்கந்தகுப்தர் ஹீணர்களின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
- குமார குப்தர் முதல் குப்த அரசர் ஹீணர்களின் படையெடுப்பை சந்தித்த அரசர்
- இவர் ஹீணர்களின் படையெடுப்பால் இறந்துபோனார்
குமார குப்தர் பிறகு ஸ்கந்த குப்தர் ஓரே முறை மட்டும் ஹீணர்களை தோற்கடித்தார்
மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குப்த வம்சம் ஹீணர்களால் அழிக்கப்பட்டது
குப்த பரம்பரையின் கடைசி மிகச் சிறந்த பேரரசர் ஸ்கந்த குப்தர்
இவர் இறந்த பிறகு 467 கி.பி குப்த பேரரசு சரிவை சந்தித்தது
ஸ்கந்த குப்தருக்கு பிறகு
பாலாதித்யர்
- பாலாதித்யர் இவரின் மறுபெயர் முதலாம் நரசிம்ம குப்தர்
- புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவர்
- மிகிர குலாவுக்கு(ஹீண வம்சத்தை சேர்ந்தவர்கள்) வரி செலுத்தி வந்தார்
- பிறகு வரி செலுத்துவதை நிறுத்தினார்
- ஹீணர்களின் அரசர் மிகிர குலாவை சிறையில் அடைத்தார்
- ஆனால் விரைவில், மிஹிரகுலா பலாதித்யாவை மகதத்திலிருந்து விரட்டினார். பாலாதித்யாவுக்குப் பிறகு, பெரிய குப்த பேரரசு மங்கிப்போனது
குப்தா பேரரசின் கடைசியாக அங்கீகரிக்கப்பட்ட மன்னர் விஷ்ணுகுப்தர் (பொ.ஆ. 540 முதல் 550 வரை)
Thanks sir
ReplyDelete