டெல்லி சுல்தான்கள் பகுதி I

டெல்லி சுல்தான்கள் (1206 முதல் 1526 பொ.ஆ வரை)

அறிமுகம்

முகமது பின் காசிம்

  • கி.பி 712ஆம் ஆண்டு சிந்து படையெடுப்பு(ரீவரி படையெடுப்பு)
  • இந்தியாவின் சிந்து பகுதி முகமது பின் காசிம் என்பவரால் சிந்து மாகாணம் படையெடுக்கப்பட்டது
  • அப்பொழுது சிந்து  பகுதியை தாகீர் என்பவர் ஆட்சி செய்தார்.
  • முகமது பின் காசிம் ஆல் முல்தான் பகுதி கைபற்றபட்டது
  • முகமது பின் காசிம் முல்தான் நகரை தங்க நகரம் என்று அழைத்தார்
  • அப்பொழுது முதன் முறையாக ஜவ்ஹர்(படையெடுப்பில் தொல்வியடைந்த பகுதியை சேர்ந்த அரச குல பெண்கள் தீயில் இறங்கி தங்களை மாய்த்து கொள்வார்கள்) இராணி பாய்(தாகீரின் மனைவி)செய்து கொண்டார்
  • குறிப்பு முதல் இஸ்சுலாமி படையெடுப்பு இந்தியாவின் மீது

முகமது கஜுனி

  • கி.பி 1000ஆம் ஆண்டு முகமது கஜுனி இந்தியாவின் மீது படையெடுத்தார் 
  • அவர் மொத்தம் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார் 
  • இதன் குறிப்பு சர் ஹென்றி எலோட் என்பவர் இந்தியாவின் வரலாறு என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்
  • இரண்டாவது முறையாக கி.பி 1025 ஆம் ஆண்டு மதுரா மற்றும் கன்னோஜ் படையெடுப்பு 
  • கி.பி 1025இல் சோமநாதர் ஆலய படையெடுப்பு அப்போதைய அரசர் ராஜா பீம் தேவ்
  • இவர் தொடர்ச்சியாக 17 முறை படையெடுத்தார்

முகமது பின் காசிம்  மற்றும் முகமது கஜுனி ஆகியோர் இந்தியாவின் செல்வத்தை கொள்ளையடிப்பதற்காகவே படையெடுத்தனர்

முகமது கோரி

  • ஆனால் முகமது கோரியால் தான் இந்திய துனண கண்டத்தில் இஸ்சுலாமி ஆட்சி முதன் முதலில் தொடங்கப்பட்டது
  • முகமது கோரி 1176ல் தலைநகர் முல்தான் மீது படையெடுத்தார்
  • அதனை தொடர்ந்து கி.பி 1191 முதல் தைரன் போர் நடைபெற்றது
  • பிரித்திவிராஜ் சவுகான் மற்றும் கோரி இடையில் 
  • இந்த போரில் பிரித்விராஜ் சவ்கான் வெற்றி பெற்றார்.
  • கி.பி 1192ல் நடைபெற்ற இரண்டாம் தைரன் போர் (முகமது கோரி மற்றும் பிரித்விராஜ் சவுகான் இடையில்)
  • இந்த போரில் முகமது கோரி வெற்றி பெற்று இந்தியாவில் இஸ்சுலாமிய ஆட்சிக்கு அடிக்கல் நாட்டினார் 
  • கி.பி 1194ல் சந்தாவர் போர் ஜெயசந்திரன் மற்றும் முகமது கோரி இடையில் 
  • ஜெயசந்திரன் முகமது கோரியால் கொல்லப்பட்டார்
  • அப்பொழுது அவரின் சார்பில் அவரது அடிமையான குத்புதின் ஐபெக் இந்தியாவில் நியமித்து சென்றார். டெல்லியை தலைநகராக கொண்டு ஆட்சி நடைபெற்றது 

குறிப்பு 

  • விக்ரமசிலா பல்கலைகழகம்(தருமாபாலரால் கட்டப்பட்டது)
  • நாளந்தா பல்கலைகழகம்(குமார குப்தாவால் கட்டப்பட்டது)

இந்த இரு பல்கலைகழகங்களும் பக்தியார் கில்ஜு என்ற துருக்கிய இஸ்சுலாமியரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது (1202 மற்றும் 1203ல்)

  • இதனை தொடர்ந்து 25 மார்ச் 1206 இல் முகமது கோரி இறப்பின் பிறகு
  • முகமது கோரிக்கு மகன்கள் இல்லை அவர் பண்டகன்(இராணுவ சேவைக்காக வாங்கிய அடிமைக்ளுக்கு பயன்படுத்தப்படும் பாரசீக சொல்) என்று அழைக்கப்படும் சிறப்பு அடிமையான குத்புதின் ஐபெக் தன்னை அரசராக அறிவித்து கொண்டார்.
  • அவரது அடிமைகளில் ஒருவரான குதுப் உத் தின் ஐபக் இந்தியாவில் உள்ள துருக்கிய பிரதேசங்களின் ஆட்சியாளராக தன்னை அறிவித்து கொண்டார்.
டெல்லி சுல்தான்கள் ஆட்சி தொடக்கம் (1206)

குத்புதின் ஐபக்

  • ஐபக் அடிமை வம்சத்தின் அடித்தளத்தை அமைத்தார்.
  • இந்த வம்சம் மம்லுக் வம்சம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • மம்லாக் என்பது அடிமை என்று பொருள்படும் அரபு வார்த்தையாகும்.
  • இவ்வாறாக சுல்தான்கள் ஆட்சி இந்தியாவில் 1206 முதல் 1526 வரை தொடர்ந்து ஆட்சி செய்யப்பட்டது.

தில்லி சுல்தானிய ஆட்சிகள் 1206 முதல் 1526 வரை

5 வம்சங்கள்

  • மம்லக் ஆட்சி 1206 -1290 வரை 84 ஆண்டுகள்
  • கில்ஜு ஆட்சி 1290 முதல் 1320 30ஆண்டுகள் (மிக குறைவான ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம்)
  • துக்ளக் ஆட்சி 1320 முதல் 1414  94 ஆண்டுகள் (மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம்) (தைமூர் படையெடுப்பு நடந்தது 1398 கி.பி
  • சையது வம்சம் 1414 முதல் 1451 வரை 37 வருடங்கள்
  • லோடி வம்சம் 1451 முதல் 1526 வரை 75 வருடங்கள்

அடிமை வம்சம் (கி.பி 1206 முதல் 1290 வரை)

  • குத்புதின் ஐபெக் 
  • சம்சுதீன் இல்துமிஷ் மற்றும்
  • கியாசுதீன் பால்பன்

இவர்கள் மூவரும் அடிமை வம்சத்தை ஆட்சி செய்த மிக சிறந்த சுல்தான்கள்

அடிமை வம்சம் சுமார் இந்திய துணைகண்டத்தை 84 வருடங்கள் ஆட்சி செய்தது

குத்புதின் ஐபெக் (1206 முதல் 1210) நான்கு வருடங்கள்)

  • இவர் லாகூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார்.
  • இந்தியாவின் மத்திய மற்றும் மேற்கு கங்கை சமவெளி பகுதிகளில் இவரே படைநடத்தி சென்று வெற்றி பெற்றார்.
  • மற்றும் கிழக்கு கங்கை பகுதி(பீகார் மற்றும் வங்காளம்) பக்தீயார் கில்ஜு படைகளின் மூலம் வெற்றி பெற்றார்
  • ஐபெக் குவுவாத் உஸ்லாம் என்ற மசுதியை கட்டினார்
  • (இந்தியாவில் முதல் மற்றும் மிக பழைமையான மசுதி இதுதான்)
  • இவர் ஜோன்பாராவையும் கட்டினார் (இராஜஸ்தான் அஜ்மிர் பகுதி)
  • இவர் குதுமீனாருக்கும் அடித்தளம் அமைத்தார் ஆனால் இவரால் இது கட்டிமுடிக்க படவில்லை
  • குதுபீனார் பின் நாட்களில் அவரது மருமகன் இல்துமீஷ் ஆல் கட்டிமுடிக்கபட்டது 
  • குறிப்பு குதுபீனார் 1369 ஆம் ஆண்டு மின்னல் தாக்கி பழுது ஆனதால் மீண்டும் பேர்ரொஷ் துக்ளக் ஆல் மறுசீரமைக்கப்பட்டது 
  • இவர் அதன் உயரத்தை 72.3மீட்டர்லிருந்து 74 மீட்டர்ராக உயர்த்தினார்.(பெர்ரொஷ் துக்ளக்) இது மொத்தம் 379 படிகள் மற்றும் 5 அடுக்குகள் கொண்டது
  • ஐபெக் குதிரைமீது இருந்து தவறி விழுந்து போலோ விளையாட்டின் போது காயமடைந்து இறந்தார்.

இல்துமிஷ்(1210 முதல் 1236 வரை) 

  • இவர் குத்புதின் ஐபெக்கின் அடிமை 
  • இவர் இல்பாரி பழங்குடியின வகுப்பை சார்ந்தவர் 
  • அது மட்டுமல்லாது பதுவான்(உத்திர பிரதேசம்) பகுதி ஆளுநராக இருந்தாவர் (ஐபெக்கின் காலத்தில்)
  • இராணுவ தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்
  • இவர் ஐபெக்கின் மருமகன்
  • ஐபெக்கின் மகன் ஆரம் ஷா குத்புதின் ஐபெக் மறைவிற்க்கு பிறகு 8 மாதங்கள் ஆட்சி செய்தார்(கி.பி 1211)
  • ஆரம் ஷா திறமை அற்றவர் அதனால் இவர் துருக்கிய பிரபுகளால் பதவியிலிருந்து விலக்கப்பட்டர்
  • இல்துமிஷ் அறியணை எறினார்
  • இவரின் ஆட்சி காலத்தில் மங்கோலியர்களின் படையெடுப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிட்டது(செங்கிஸ்கான் படையெடுப்பு)
  • இவர் செங்கிஸ்கான் படையெடுப்பிலிருந்து தப்பித்து கொள்ள குவாரிஜம் ஷா ஜாலாலுதீன் க்கு அடைகளம் கொடுக்க மறுத்துவிட்டார்.
  • இவர் மங்கோலிய படையெடுப்புகளை தடுப்பதற்காக நாற்பதின்மற் குழு ஒன்றை உருவாக்கினார் (40 பேர் கொண்ட குழு) இது சகல் காணி என்றும் அழைக்கப்பட்டது.
  • இல்துமிஷ் இக்தாக்கள்(நிலங்கள்) இராணுவ வீரர்களுக்கு வழங்கினார் 
  • இக்தா(முக்தி) வைத்துள்ளவர்கள் இக்ததார் என்று அழைக்கப்பட்டனர்.
  • இவர்கள் சுல்தானுக்கு இராணுவ உதவிகளை செய்ய வேண்டும் போர் காலத்தில் 
  • இக்ததார்கள் இக்தா வரி வசூல் செய்து தங்களது படைவீரர்கள் மற்றும் குதிரைகளை பராமரித்தார்கள்
  • இவர் குதுமினாரை கட்டிமுடித்தார் (243 அடி டெல்லி)
  • இல்துமிஷ் ஏப்ரல் 1236 ஆம் ஆண்டு 26 வருட ஆட்சிக்கு பிறகு மரணமடைந்தார்.
  • இல்துமிஷ் மகன் ருக்ருதின் பைருஸ் இறப்பிற்கு பிறகு 
  • இவரது மகள் இரசியா சுல்தானாவை அறியனையில் அமர்த்தினார்
  • இந்தியாவில் அரேபிய நாணயங்கள் வெளியிட்ட முதல் அரசர் 
  • வெள்ளி நாணயங்கள் (டங்கா) 175மிகி)
  • செப்பு நாணயங்கள் (ஜுடால்)
இரசியா சுல்தானா(1236 முதல் 1240)

  • ரசியா ஒரு திறமையான மற்றும் தைரியமான போராளி
  • அவர் துருக்கி அல்லாத பிரபுக்களுக்கு ஆதரவு அளித்தார்.
  • மங்கோலியர்கள் அவரது ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் பகுதிகளில் படையெடுத்தனர்.
  • ரசியா எத்தோபிய அடிமை ஜாலாலுதின் யாகூத் என்பவரை தனது சொந்த பாதுக்காப்பாளராகினார்
  • அவர் யாகூத்தை முழுமையாக நம்பினார் 
  • இது துருக்கிய பிரபுக்களின் கிளர்ச்சிக்கு வழிவகுத்தது, ரசியாவிற்கு எதிராக சதி செய்து கி.பி1240 இல் கொலை செய்யப்பட்டார்.
  • ரசியாவுக்குப் பிறகு மூன்று பலவீனமான ஆட்சியாளர்கள் அரியணையில் ஏறினர்கள்
  • அவர்கள் துருக்கிய பிரபுகளால் பதவியிலிருந்து அகற்றபட்டனர்.
  • அதன் பிறகு கியாசுதின் பால்பன் ஆட்சிக்கு வந்தார்.

கியசுதீன் பால்பன்/ உலுகான்(1266 - 1287)

  • இல்பாரீ பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்
  • இல்துமிஷ்ன் அடிமை தான் பால்பன் 
  • நற்பதின்மற் குழுவை அழித்தார்.
  • தெய்விக உரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
  • ஒற்றர் தூது குழு மற்றும் இராணுவ துறையை அறிமுகப்படுத்தினார்
  • இராணுவத்துறை திவானி அர்ஸ் என்றழைக்கப்பட்டது
  • இவர் பைபோஸ் என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தினார் சுல்தானின் பாதத்தை முத்தம் இட்டு வணங்கும் முறையை கொண்டு வந்தார்
  • நவரோஸ் என்ற விழாவை நடத்தினார்
  • துக்ரில் கான் என்ற வங்காள ஆளுநர் இவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைபிடிக்கப்பட்டு தலைதுண்டிக்கப்பட்டு கொள்ளப்படார்
  • இவர் (பாரசீக)அமீர் குஸ்ரு என்ற புலவரை ஆதரித்தார் (இந்திய கிளி)
  • மற்றும் அமீர் ஹசன் என்ற மற்றோரு புலவரையும் ஆதரித்தார்.
  • மீவாட்டை சேர்ந்த மியாக்களை ஒடுக்கினார் இவர்கள் இராஜபுத்திர முஸ்லிம்கள் வடமேற்கு இந்திய பகுதியை சார்ந்தவர்கள்
  • இவர் மங்கோலியர்களுடன் நட்புறவு கொண்டார்.
  • இவர் மங்கோலிய தலைவரிடம் சட்லேஜ் தாண்டி படையெடுக்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்.
  • பால்பன் 1287 இறப்பு
  • பால்பனின் மகன் மங்கோலியருக்கு எதிரான படையெடுப்பில் கொல்லப்பட்டதால் மன உளச்சலில் பால்பன் 1287இறந்தார்
  • பால்பனுக்கு பிறகு
  • பால்பனின் மகன்கள்
    • முகமத் கான் (மங்கோலிய படையெடுப்பின் காராணமாக இறந்தார்) இதனால் மனஉளச்சலில் பால்பன் இறந்தார் 
    • நசிருதின் பகுரா கான்

கைகுபாத் மற்றும் கையூமார் 

  • அதன் பிறகு பால்பனின் பேரன் கைகுபாத் அரசரானார்
  • கைகுபாத் திறமையற்றவர்
  • அதனால் துருக்கிய பிரபுகளால் அகற்றபட்டார்
  • அதன் பிறகு கையூமார் (குழந்தை)
  • கையூமாரின் பாதுகாவலராக  ஜலாலுதீன் கில்ஜு நியமிக்கப்பட்டார்.
  • ஜலாலுதீன் கில்ஜு கையூமார் மற்றும் கைகுபாத் இருவரையும் கொன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்
  • கில்ஜு வம்சத்தை தோற்றுவித்தார்.

கில்ஜு வம்சம்

ஜலாலுதீன் கில்ஜு (1290 முதல் 1296 வரை)

  • பாலான்பனின் படைவீரராக பணிபுரிந்தவர்.
  • 1290 கி.பி நாயிப் ஆக பணிபுரிந்தார்.
  • ஜலாலுதீன் கில்ஜு காலத்தில் பெரும்பாலான படையெடுப்புகள் அலாவூதின் கில்ஜு தலைமையில் நடைபெற்றது(காராவின் ஆளுநர்)
  • ஜலாலுதீன் கில்ஜு கருணை உள்ள கொண்டவர் என்றழைக்கப்பட்டார்.
  • அலாவூதீன் கில்ஜு மிக முக்கியமான படையெடுப்பான தேவகிரி படையெடுப்பு (தக்கண படையெடுப்பு)
  • அலாவூதீன் யாதவ மன்னன் ராமாசந்திரவை வெற்றி கொண்டு பெரும் பொருட்செல்வத்துடன் தலைநகரம் திரும்பினார்
  • இந்த படையெடுபில் கிடைத்த பெரும் செல்வத்தால் சூழ்ச்சி செய்து ஜலாலுதினை கொண்றுவிட்டு தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்து கொண்டார்(கி.பி 1296)

அலாவூதீன் கில்ஜு(1296 - 1316)

  • அலாவூதீன் கில்ஜு தனது முதல் வருடத்தை அவரது எதிரிகளை கண்டுபிடித்து அகற்றினார்.
  • உயர் பதவியில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
  • இவருடைய இரண்டாம் ஆண்டில் 1298ஆம் ஆண்டு மங்கோலியர்களை தோற்கடித்தார்.
  • கடைசி பெரிய மங்கோலிய ஊடுருவல் 1307 முதல் 1308 வரை நடந்தது

அலாவூதீன் கில்ஜுயின் வெற்றிகள்

  • தேவகிரி படையெடுப்பு (1296, 1307, 1314)
  • குஜராத் படையெடுப்பு ( 1299 - 1300)
  • ரதன்பூர் படையெடுப்பு(1301) அமிர் தேவா ஆட்சியாளர்
  • சித்தூர் படையெடுப்பு (1303) (இராஜபுத்திர அரசர் ரத்தன் சிங்)

அலாவூதின் கில்ஜுயின்  முதல் இலக்கு தீபகற்பத்தின் மேற்கு தக்கணத்தின் தேவகிரி ஆகும்

அலாவூதின் மலீக் காபூர் தலைமையில் மிக பெரிய படையெடுப்பு நடத்தி தேவகிரி கோட்டையை கைப்பற்றினார் கி.பி 1307ல் 

அப்போழுது அங்கிருந்த அரச குல பெண்கள் பத்மாவதி(அரசி) உட்பட அனைவரும் ஜவ்கர் செய்து தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்கள்.


Comments

Post a Comment

Popular posts from this blog

சிந்துவெளி நாகரிகம் பகுதி - II

குப்தர்கள் பகுதி - I