சிந்துவெளி நாகரிகம் அறிமுகம் பகுதி - I
இந்திய வரலாறு
சிந்து சமவெளி நாகரிகம்
பழமையான நாகரிகங்கள் நான்கு
- மெசபடோமிய (3500 முதல் 2000) BCE யூப்ரிட்டிஸ் மற்றும் டைக்ரிஸ் (சுமேரிய நாகரிகம்) (ஆசிய கண்டம்)
- சிந்துசமவெளி (3300 முதல் 1900) BCE சிந்து நதி (ஆசிய கண்டம்)
- எகிப்து ( 3100 முதல் 1100) BCE நைல் நதி (தென்ஆப்பிரிக்கா)
- சீனா (1700 முதல் 1122) BCE (மஞ்சள் நதி நாகரிகம் / ஹவோங்கு நதி )(ஆசிய கண்டம் )
இவை அனைத்தும் ஆற்றங்கரை நாகரிகங்கள்
நாகரிகத்தின் தொட்டில் நதிக்கரைகள்
(யாங்சி நதி மிகப்பெரிய நதி ஆசிய கண்டத்தில்(சீனாவில் உள்ளது) இந்த நதியில் தான் முப்பாள்ளத்தாக்கு அணை அமைந்துள்ளது)
கால வரையறை
- தெற்கு ஆசியா
- வெண்கல காலம்
- 3300 முதல் 1900 கதிரியக்க கார்பன் வயது கணிப்பு படி
- 13 லட்சம் சதுர கி.மீ. 11 BOOK (1.5 மில்லியன் சதுர கி. மீ)
- 6 பெரிய நகரங்கள்
- 200க்கும் மேற்பட்ட கிராமங்கள்
இந்தியாவின் முதல் நகர நாகரிகம் சிந்துவெளி நாகரிகம்
சிந்து வெளி நாகரித்தின் மறுபெயர் ஹரப்பா நாகரிகம்
சிந்து வெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட நகரம் ஹரப்பா
சிந்து வெளி நாகரிகம் காலம் (வரலாற்றின் தொடக்க காலம் )
வரலாறு
- வரலாற்றுக்கு முந்தைய காலம் (எழுத்து பூர்வமான ஆதரங்கள் இல்லை)
- வரலாற்றின் தொடக்க காலம் (எழுத்து பூர்வமான ஆதரம் உண்டு ஆனால் இதன் பொருள் இன்றளவும் நம்மால் அறிந்து கொள்ள இயலவில்லை (சித்திர எழுத்து முறை)
- வரலாற்று காலம் (எழுத்து பூர்வமான ஆதாரம் உண்டு)
செம்பு காலம் அல்லது வெண்கலம் காலம் ஹரப்பா காலம்
(செம்புடன் டின் சேர்த்து வரும் கலவை வெண்கலம்)
ஹரப்பா நாகரித்தின் இடிப்பாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் சார்லஸ் மேசன் (1826)
கிழக்கிந்திய இரணுவ படையின் வீரர் மற்றும் ஆய்வாளர்
“அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
1831 அம்ரீ என்ற இடத்திற்கு அலெக்சான்டர் பார்ன்ஸ் வருகை தந்தார்
1856 லாகூர் முதல் கராச்சி(முல்தான்) நகரம் வரை இருப்பு பாதை அமைக்கும் பொருட்டு ஹரப்பா நகரம் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டது
இங்கு கண்டுபிடிக்கபட்ட முத்திரையை அலெக்ஸாண்டர் கான்னிங்கம் பார்வையிட்டார். 1853, 1856, 1875 ஆகிய ஆண்டுகளில் ஹரப்பா நகரத்தை பார்வையிட்டார்
இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை
- 1861 அலெக்ஸாண்டர் கானிங்காம் மூலம் தொடங்கப்பட்டது
- இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது
- சர் ஜான் மார்ஷல் வருகைக்கு பிறகு தான் ஹரப்பா நாகரிம் முக்கியதுவம் பெற்றது (தொல்பொருள் ஆய்வு துறையின் இயக்குநாராக பொறுப்பெற்ற பிறகு) (1902 - 1928)
- 1904 கர்சன் பிரபு தொல்பொருள் பாதுக்காப்பு சட்டம் கொண்டு வந்தார், சர் ஜான் மார்ஷல் பறிந்துரை படி
- ஹரப்பா மற்றும் மோகஞ்சதாரோவிற்கு இடையே உள்ள ஒற்றுமை உள்ளது
- ஒரு பெரிய நாகரிகத்தின் இரு பெரும் பகுதிகள் என்று சர் ஜான் மார்ஷல் கூறினார்
- இந்திய தொல்லியல் துறையில் முக்கிய பங்கு வகித்தவர் சர் ஜான் மார்ஷல்
1940 மார்டிமர் வீலர் என்பவர் பல நகரங்களை கண்டறிந்தார் (இந்தியா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிள்)
ராபட் புருஸ் பல்லாவரத்தில் 1863 ல் கைகோடாரியை கண்டறிந்தார் தொடக்க கால இந்திய வரலாற்றின் தந்தை இராபர்ட் பூருஸ்
முக்கிய நகரங்கள்
ஹரப்பா
- முதன் முதலில் கண்டெடுக்க பட்ட நகரம் ஹரப்பா 1921 தாயாராம் சஹீனி(முதல் இந்திய DG of ASI) (ராவி நதி) கரையில் தற்போது உள்ள பஞ்சாப் பாகிஸ்தான் ஹகிவால் மாவட்டம்
- சிந்தி மொழியில் புதையுண்ட நகரம்
மொஞ்சதாரோ
- 1922 மொஞ்சதாரோ ஆர்.டீ. பானர்ஜு (சிந்து நதிகரையில்)
- சிந்து வெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகபெரிய தொல்பொருள் ஆய்வு இடம் மொகஞ்சதாரோ லர்கானா மாவட்டம் சிந்து மாகாணம் பாகிஸ்தான் இறந்தவர் மேடு
- காலிபங்கன் - ராஜஸ்தான்
- ரூபர் – பஞ்சாப்
- லோத்தல் குஜராத்
- பனவாலி ஹரியான
- ரகிகர்கி ஹரியான (இந்திய எல்லை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய சிந்துவெளி நகரம்)
- ராங்குபூர் குஜராத்
- சூர்கோட்ட குஜராத்
- தோலவிரா குஜராத் சித்திர எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது 10 சித்திர எழுத்துகளை கொண்ட குறியிட்டு சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது
கொற்கை வஞ்சி தொண்டி கே.வி.டி வாளகம்
- பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ளது இந்த பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள்
எல்லைகள்
- வடக்கு சோர்டுகை ஆப்கானிஸ்தான்
- மேற்கு சட்கஜென் டோர் பாகிஸ்தான் இரான் எல்லை
- கிழக்கு ஆலம்கீர்பூர் உத்திரபிரதேசம் இந்தியா
- தெற்கு தைமாபாத் மாகாராஸ்டிரா
- 1931இல் சர்ஜான் மார்ஷல் கூற்றுபடி ஹரப்பா காலம் 3250 முதல் 2750 BCE
- 1956இல் பெர்சர்விஸ் 2000 முதல் 1500
- 1964இல் டீ.பி. அகர்வால் 2300 முதல் 1750
சர் ஜான் மார்ஷல் கூற்றுபடி
- சர் ஜான் மார்ஷல் திராவிட நாகரிகத் தொடு சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிடுகிறார்.
- சிந்துவெளி நாகரிகம் வேதகாலத்திற்கு முன் தோன்றியது
- மொகஞ்சதாரோவிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக கூறுகிறார்
- (வணிக தொடர்பு)
ஆர்.டீ. பானர்ஜு கூற்றுபடி சிந்துவெளி மக்கள் திராவிட மக்கள் என குறிப்பிட்டார்
ஹரப்பா நாகரித்தின் வளர்ச்சி
- ஹரப்பாவின் முந்தைய நிலை
- தொடக்க கால ஹரப்பா
- முதிர்ந்த ஹரப்பா
- பிந்தைய ஹரப்பா
ஹரப்பாவிற்கு முந்தைய நிலை
- கிழக்கு பலுசிஸ்தான் தற்போதைய பாகிஸ்தான்
- மெஹர்கர் புதிய கற்காலத்தை சார்ந்தது
- போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பொ.ஆ.மு 7000 ஐ சார்ந்தது
- விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர்
- நாடோடி வாழ்க்கை முறையில் இருந்து நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விவசாயத்தை செய்தனர்
தொடக்க கால ஹரப்பா (3000 முதல் 2600) பொ.ஆ.மு
- நகரங்கள் வளர தொடங்கின
- கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு சென்றனர்
முதிர்ந்த ஹரப்பா நாகரிகம் (2600 முதல் 1900)பொ.ஆ.மு வரை
- மிக பெரிய நகரங்கள் தொன்றின
- சிறப்பான திட்டமிடபட்ட நகரங்கள் உருவாக்கப்பட்டன
பிந்தைய ஹரப்பா 1900 முதல் 1700
- லோத்தல் பகுதி இந்த கால கட்டத்தை சார்ந்தது
- 1900 பொ.ஆ.மு லிருந்து ஹரப்பா நாகரிகம் சரிய தொடங்கியது
- தொரயாமாக 1800 பொ.ஆ.மு லிருந்து சரியத் தொடங்கியது
Comments
Post a Comment