இந்திய அரசியலமைப்பு பகுதி - I (TNPSC GROUP EXAMS NOTES)
இந்திய அரசியலமைப்பு
அறிமுகம்
கேபினட்தூதுக்குழு
- 1946 மார்ச் 23 அன்று இந்தியா வந்தது
- அட்லி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது
- பெதிக்லாரன்ஸ், ஏவி அலெக்ஸாண்டர் மற்றும் கிரிப்ஸ் இதன் உறுப்பினர்கள்.
- புதிய அரசியல் நிர்ணயசபை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது
- 10 லட்சம் பேருக்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்படும் என்று அறிவித்தது.
இடைக்கால அரசாங்கம்
- நேரு தலைமையில் செப்டம்பர் 2 1946 அமைக்கப்பட்டது.
- இரண்டு நாடுகளுக்கு இடையே சமரச உடன் படிக்கைகள் செய்து கொள்ளலாம்
மவுண்ட்பேட்டன் திட்டம்
- ஜீன் 3 1947
- மறுபெயர் ஜீன் 3 1947
- மறுபெயர் ஜீன் 3 திட்டம்
- இத்திட்டம் வர காரணம் பாகிஸ்தான் மற்றும் இந்தியா பிரிவினை
- இந்தியா பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
இந்திய விடுதலை சட்டம் 1947
- இந்தியா பாகிஸ்தான் பிரிவினை திட்டத்திற்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1947 ஜீலை 5 ல் அங்கீகாரம் அளித்தது
- பிரிட்டிஷ் பேரரசின் ஒப்புதல் இந்திய விடுதலை சட்டத்திற்கு வழங்கப்பட்டது ஜீலை 19 1947
- நடைமுறைபடுத்தப்பட்டது 14 மற்றும் 15 ஆகஸ்டு 1947
- 14 ஆகஸ்டு 1947 பாகிஸ்தான் விடுதலை
- 15 ஆகஸ்டு 1947 இந்தியா விடுதலை
- சுதந்திரம் அடையும் போது இந்திய வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
- கடைசி பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
- முதல் இந்திய வைஸ்ராய் ராஜாஜி
இந்திய அரசியல் அமைப்பின் உருவாக்கம்
இந்திய அரசியலமைப்பை உருவாக்க கோரிக்கை வைத்தவர்கள்
- 1934- இல் எம் என் ராய்
- 1935 - காங்கிரஸ்
- 1938 - ஜவஹர்லால் நேரு
அரசியல் நிர்ணயசபை
- அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒப்புதல் அளித்த குழு கேபினெட் தூதுக்குழு 1946
- மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389
- மாகாணங்களில் இருந்து 296 பேர்
- சுதேச அரசுகளிலிருந்து 93 பேர்
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் டிசம்பர் 9 1946
- முதல் கூட்டத்தின் இடைக்கால தலைவர் சச்சிதானந்தசின்ஹா
இரண்டாவது கூட்டம்
- டிசம்பர் 11 1946
- நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்
- துணைத்தலைவர் ஹரேந்திரகுமார் முகர்ஜி (எச் சி முகர்ஜி)
- ஆலோசகர் பிஎன் ராவ்
மூன்றாவது கூட்டம்
- டிசம்பர் 13 1946
- ஜவஹர்லால் நேரு குறிக்கோள் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்
அனைத்து பகுதிகளும் இயற்றப்பட்ட பின்னர் குறிக்கோள் தீர்மானம் முகவுரையாக ஏற்கப்பட்டது
முகவுரையில் சிற்பி ஜவஹர்லால் நேரு
அரசியல் நிர்ணயசபையில் இடம் பெறாத தலைவர்கள் மகாத்மா காந்தி முகமது அலிஜின்னா
வரைவுக்குழு
- அமைக்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 29 1947
- இதன் தலைவர் பி ஆர் அம்பேத்கர்
வரைவுக் குழு உறுப்பினர்கள்
கோபலசாமி
அல்லாதிகிருஷ்ணசாமி
முகமதுசாதுல்லா
மாதவராவ்
டி டி கிருஷ்ணமாச்சாரி
- வரைவுக்குழு அரசியலமைப்பை அளித்த நாள் பிப்ரவரி 21 1948
- வரைவுக்குழு அரசியலமைப்பை உருவாக்க ஆன நாட்கள் 114 நாட்கள்
- இந்திய அரசியலமைப்பு சட்டமாக இயற்றி இந்திய மக்களால் அரசியல் நிர்ணய சபையின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26 1949
- இந்திய அரசியலமைப்பு உருவான கால அளவு இரண்டு வருடம் பதினோரு மாதம் 18 நாள்
- இந்திய அரசியல் அமைப்பு கூடிய நாட்கள் 165 நாட்கள்
- இந்திய அரசியல் நிர்ணயசபை கூடிய கூட்டங்கள் எண்ணிக்கை 11
- இந்திய அரசியல் நிர்ணயசபையின் கடைசி கூட்டம் ஜனவரி 24 1950
- இந்திய அரசியலமைப்பில் கையெழுத்திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 284
- இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 26 1950
- இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர்
- இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கர்
- இந்திய அரசியலமைப்பின் நவீன மனு அம்பேத்கர்
- அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் குழுவின் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல்
- மாநில அரசியலமைப்பின் குழுவின் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல்
- மத்திய அரசியலமைப்பின் குழுவின் தலைவர் ஜவஹர்லால் நேரு
- தேசியக் கொடிக்கான குழுவின் தலைவர் கிருபாளினி
- இந்திய அரசியல அமைப்பு பிரேம் பெஹாரி நரேன் ரைசாடா கையெழுத்தில் உருவானது
- இந்திய அரசியலமைப்பை அழகுபடுத்தியவர் ராம் மனோகர் சிம்ஹா மற்றும் நந்தாலால் போஸ்
- இந்திய அரசியலமைப்பை உருவாக்க செலவான பணம் 64 லட்சம்
- உலகின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்பு
அமெரிக்கா
- எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம்
- அடிப்படை உரிமைகள்
- குடியரசு துணைத் தலைவரின் பணிகள்
- முகப்புரை
- நீதி மறு ஆய்வு
- நீதித்துறையின் சுதந்திரம்
- நீதிபதிகளின் பதவி நீக்கம்
அயர்லாந்து
- வழிகாட்டும் விதிகள்(DPSP)
- குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை
- ராஜ்யசபா உறுப்பினர்கள் நியமனம்
கனடா
- வலிமையான மத்திய அரசினை கொண்ட கூட்டாட்சி
- எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும்
- மாநில ஆளுநர்களை நியமிப்பது
- உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை கேட்கும் அதிகாரம்
ஆஸ்திரேலியா
- பொதுப் பட்டியல்
- வர்த்தக வணிக தொடர்புகள்
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம்
தென் ஆப்பிரிக்கா
- அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை
- ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை
ரஷ்யா
- அடிப்படை கடமைகள்
- முகவுரையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் இலக்குகள்
ஜெர்மனி
- நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகள் நிறுத்துவது
பிரான்ஸ்
- முகவுரையில் உள்ள சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் குடியரசு
ஜப்பான்
- சட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை விதி முறை
சுவிட்சர்லாந்து
- கூட்டாட்சியின் வரம்புக்குட்பட்ட அதிகாரங்கள்
- 1935 இந்திய அரசு சட்டம்
- கூட்டாட்சி அரசாங்க முறை
- கூட்டாட்சி நீதித்துறை
- பணியாளர் தேர்வாணையங்கள்
- நெருக்கடி நிலை பிரகடனங்கள்
- மாநில ஆளுநர் பதவி
இங்கிலாந்து
- ஒற்றை குடியுரிமை
- பாராளுமன்றம்
- கேபினட்
- சட்டத்தின் ஆட்சி
- மரபுகள்
- CAG
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது பின் வருவன
- முகவுரை
- 22 பகுதிகள்
- 8 அட்டவணைகள்
- 395 விதிகள்
இந்திய அரசியல் அமைப்பில் தற்போது உள்ளவை
- முகவுரை
- 25 பகுதிகள்
- 12 அட்டவணைகள்
- 465 விதிகள்
நவம்பர் 26 1949 ஆண்டு நடைமுறைக்கு வந்த பகுதிகள்
- குடியுரிமை
- தேர்தல்
- தற்காலிக பாராளுமன்றம்
- குறுந்தலைப்புகள்
இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாட்கள்
- குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22 1947
- தேசியக் கொடி ஜீலை 22 1947
- தேசிய நாட்காட்டி மார்ச் 22 1957
- தேசிய கீதம் ஜனவரி 24 1950
- தேசிய பாடல் ஜனவரி 24 1950
- தேசிய சின்னம் ஜனவரி 26 1950
- குடியுரிமை தினம் ஜனவரி 26 1950
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தம் 1951
- இந்தியாவில் முதல் பாராளுமன்ற தேர்தல் 1951 - 1952
முகப்புரை
- இந்திய அரசியலமைப்பின் நுழைவாயில்
- மக்களே அதிகாரத்தின் தோற்றுவாய்
- முகவுரை இந்திய அரசிலமைப்பின் குறிக்கோளையும் ஆசைகளையும் உள்ளடக்கியது
- முகப்புரை நீதிக்கு அப்பாற்பட்டது அதாவது நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த முடியாது
- முகப்புரை அறிமுகப்படுத்தியவர் ஜவகர்லால் நேரு
- முகப்புரை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என கூறியவர் பால்கிவாளா
- முகப்புரை மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம் எனக் கூறியவர் கே எம் முன்ஷி
- முகப்புரையின் சிற்பி என அழைக்கப்படுபவர் ஜவஹர்லால் நேரு
- முகப்புரை 1946 டிசம்பர் 13 நேரு அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட குறிக்கோள் தீர்மானம் முகவுரையானது
- முகவுரை ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் ஜனவரி 22 1947
- முகவுரையை ஒரே ஒரு முறை மட்டும் திருத்தம் செய்யப்பட்டது
- 1976 42 வது சட்ட திருத்தத்தில் சமத்துவ மதசார்பற்ற ஒருங்கிணைந்த என்னும் வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது
- முதன் முதலில் முகவுரையை கொண்டிருந்த நாடு அமெரிக்கா
- இந்தியா அமெரிக்கா முகவுரையை பின் பற்றியது
- சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பது பிரெஞ்சு புரட்சியின் தத்துவங்கள்
- இறையாண்மை என்பது உள்நாட்டு கொள்கை மற்றும் வெளியுறவு இந்திய அரசுக்கும் மேலான அதிகாரம் எதுவும் இல்லை என்பதை குறிக்கிறது
- 1955இல் ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் சமதர்ம சமுதாய கொள்கை என்பது காந்தி கொள்கை மற்றும் மார்க்சிய கொள்கை இரண்டும் கலந்த கொள்கையாகும்
- சுதந்திரம் பிரெஞ்சு புரட்சி தத்துவத்திலிருந்து 1789ல் பெறப்பட்டது
- நீதி சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் வழங்குகிறது
- இது ரஷ்யப் புரட்சியில் இருந்து 1917ல் பெறப்பட்டது.
- சகோதரத்துவம் ஒற்றைக் குடியுரிமை மூலம் இது நிலை நாட்டப்படுகிறது
- ஜனநாயகம் அரசியல் சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்தை குறிப்பிடுகிறது
- மக்களே இறையாண்மை பெற்றவர்கள் என்ற கருத்தை கொண்டது
- மதசார்பின்மை இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களும் சமம் 1888 இல் நடந்த அலகாபாத் காங்கிரஸ் மாநாடு மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது.
அரசியலமைப்பு
- ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி அரசியல் அமைப்பு ஆகும்
- அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது
அரசியலமைப்பின் அவசியம்
- மக்களாட்சி நாடுகளில் அரசியலமைப்பு அடிப்படை கொள்கைகளை வகுத்து சமூகத்தின் அடிப்படைத் தன்மையை நமக்கு தெரிவிக்கிறது
இந்திய அரசியலமைப்பு
- 1946 ஆம் ஆண்டு அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இந்த சபையில் 292 மாகாண பிரதிநிதிகள் 93 சுதேச அரசுகளின் நியமன உறுப்பினர்கள்
- பலுச்சிஸ்தானின் சார்பில் ஒருவர் மற்றும் மாகாண முதன்மை ஆணையர்கள் சார்பில் மூவர் என மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்தனர்
- சபை டிசம்பர் 9 1946ல் நடைபெற்றது
- தற்காலிகத் தலைவர் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
- கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கும் போதே அவர் இறந்ததால் டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- துணைத்தலைவர் ஹெச்சி முகர்ஜி மற்றும் விடி கிருஷ்ணமாச்சாரி
- 11 அமர்வுகள் 166 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்றது
- கூட்டத்தின் போது 2473 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன
- இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு
- இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது
- இந்திய அரசியலமைப்பின் தந்தை என அம்பேத்கர் அழைக்கப்படுகிறார்
- அரசியலமைப்பு முகவுரை 22 பாகங்கள் 395 சட்டப் பிரிவுகள் மற்றும் 8 அட்டவணைகள் கொண்டிருந்தது
- 1949 நவம்பர் 26ல் அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளப்பட்டது
- 1950 ஜனவரி 26 இந்திய அரசிலமைப்பி சட்டம் நடைமுறைக்கு வந்தது இந்த நாளையே குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்
- பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா இந்திய அரசியலமைப்பு சட்டம் இத்தாலிய பாணியில் எழுதினார்
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு கூறுகள்
- உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு
- பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை
- நெகிழும் மற்றும் நெகிழா தன்மைகொண்டது
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது
- சுதந்திரமான நீதித் துறையின் வழங்குகிறது
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் வழங்குகிறது
- ஒற்றை குடியுரிமை
- சிறுபான்மையினர் பட்டியலினத்தவர் பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள்
முகவுரை
- இது அரசியலமைப்புக்கு அறிமுகம் அல்லது முன்னுரை ஆகும்
- அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள் நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை கொடுக்கும்
- அரசியலமைப்பின் திறவுகோல் எனவும் அழைக்கப்படும்
- 1947 ஜனவரி 2 இந்திய அரசியல் நிர்ணய சபை ஜவஹர்லால் நேருவின் குறிக்கோள் தீர்மானம் முகவுரையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
முகவுரையில்
- சமதர்மம்
- சமயசார்பின்மை
- ஒருமைப்பாடு
ஆகிய சொற்கள் 1976 ல் 42வது சட்ட திருத்ததில் சேர்க்கப்பட்டது
- முகவுரையின் தொடக்கம் "இந்திய மக்களாகிய நாம்"
- இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சமதர்மம் சமய சார்பற்ற ஜனநாயக குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது
- 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியில் இருந்து பெறப்பட்ட சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியன முகவுரையில் சேர்க்கப்பட்டது
குடியுரிமை
- சிட்டிசன் என்ற சொல் சிவிஸ் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது
- பொருள் நகர அரசில் வசிப்பவர்
- ஒற்றை குடியுரிமை
- பாகம் 2 சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை
குடியிடிரிமை சட்டம் 1955
- குடியிரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியவை பற்றி விளக்குகிறது
- இது 8 முறை திருத்தப்பட்டுள்ளது
- குடியுரிமை சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது ஆனால் 2003ல் இவ்வுரிமை நீக்கப்பட்டது
குடியுரிமை பெறுதல்
- 1955 குடியுரிமை சட்டம் ஐந்து வழிகளை குடியுரிமை பெற பரிந்துரை செய்திறது
பிறப்பின் மூலம்
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று அல்லது அதற்கு பின்னரோ இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாக கருதப்படுவர்
வம்சாவளி மூலம்
1950 ஜனவரி 26 அன்று அல்லது அதற்கு பின்னரோ வெளிநாட்டில் பிறந்த ஒருவரின் தந்தை அவர் பிறந்தபோது இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் குடியுரிமை கிடைக்கும்
பதிவின் மூலம்
இந்திய குடியுரிமை கோரி பொருத்தமான அங்கீகாரத்துடன் பதிவு செய்தால் குடியுரிமை கிடைக்கும்
இயல்புரிமை மூலம்
ஒரு வெளிநாட்டவர் இந்திய அரசிற்கு இயல்புரிமை கோரி விண்ணப்பம் மூலம் பெற முடியும்
பிரதேச இணைவின் மூலம்
இந்தியாவுடன் பிற நாடுகள் இணையும் போது அந்த மக்களுக்கும் குடியுரிமை வழங்கலாம்
குடியுரிமை இழத்தல்
1955 குடியுரிமை சட்டப்படி குடியுரிமையை மூன்று வழிகளில் இழப்பர்
- தாமாக முன்வந்து குடியுரிமையை துரத்தல்
- வேறு நாட்டின் குடியுரிமை பெறும் போது தானாக இந்திய குடியுரிமை முடிவுக்கு வருதல்
- இயல்புரிமை இன் மூலம் குடியுரிமை பெற்ற ஒருவரி மோசடி செய்து குடியுரிமை பெற்றவர் தவறான பிரதிநிதித்துவம் தந்தவர் அல்லது உண்மைகளை மறைத்து அவர் அல்லது எதிரி நாட்டுடன் வாணிகம் செய்தவர் அல்லது இரண்டாண்டு காலத்திற்கு சிறை தண்டனை பெற்றவர் என்பதை மத்திய அரசு கண்டறிந்தால் மத்திய அரசு அவரது குடியுரிமையை இழக்க செய்யும்
Comments
Post a Comment