இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் மற்றும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் மற்றும் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்.
அடிப்படை கடமைகள்
- ரஷ்யாவிலிருந்து பின்பற்றபட்டவை
- இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அடிப்படை கடமைகள் உள்ளன
- 1975இல் உள்நாட்டு தேசிய நெருக்கடி நிலையின் போது உருவான வன்முறை நிகழ்வுகளை தொடர்ந்து இயற்றப்பட்டது
- 1976ல் ஸ்வரன் சிங் கமிட்டியால் உருவாக்கப்பட்டது
- 1976ல் 42 வது சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது
- 1976 42 வது சட்டத்திருத்தம் மூலம் பகுதி 4A விதி 51A மொத்தம் பத்து அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது.
- தற்போது 11 அடிப்படை கடமைகள் உள்ளன
- 11வது அடிப்படை கடமை 86வது சட்டத்திருத்தம் மூலம் 2002ல் கொண்டுவரப்பட்டது (இலவச கட்டாய கல்வி)
- அடிப்படை கடமைகள் குறித்து மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டது. அது வர்மா கமிட்டி 1999
- அடிப்படை கடமைகள் நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்த படுபவை அல்ல.
- அடிப்படை கடமைகள் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது இடம்பெறவில்லை.
விதி 51A(A)
- அரசியலமைப்பை பின்பற்றுதல் தேசிய கொடி தேசிய கீதத்திற்கு மரியாதை அளித்தல்
விதி 51A(B)
- சுதந்திரப் போராட்டத்தின் உரிய குறிக்கோளை பின்பற்றுதல் மற்றும் போற்றுதல்.
விதி 51A(C)
- இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை ஒருமைப்பாட்டை பாதுகாத்தல்.
விதி 51A(D)
- தேவைப்படும் போது தேசிய பணிபுரிதல்.
விதி 51A(E)
- சமய மொழி வட்டார வேறுபாடுகளை களைந்து சகோதரத்துவத்தை மேம்படுத்துதல். பெண்களின் மேன்மையை கெடுக்கும் செயல்களை கைவிடுதல்.
விதி 51A(F)
- கலாச்சார பாரம்பரியத்தை பேணுதல்.
விதி 51A(G)
- இயற்கை சூழ்நிலையை பாதுகாத்தல்.
விதி 51A(H)
- மனநிறைவு பகுத்தறிவு சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல்.
விதி 51A(I)
- பொது சொத்துக்களை காத்தல் வன்முறை கைவிடுதல்.
விதி 51A(J)
- நாட்டினை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் வளரச் செய்தல்.
விதி 51A(K)
- 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கல்வி வாய்ப்பினை ஏற்படுத்துதல்
அரசியலமைப்பு நமக்கு சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பையும் தருகிறது.
இதற்கு பதிலாக நாம் அனைவரும் சகோதரத்துடன் பல்வேறு கலாச்சாரத்துடன் பல்வேறு சூழ்நிலைகளை மனதில் ஏற்படுத்தி பொது சொத்துக்களை காத்து நம் நாட்டினை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுதல் வேண்டும்.
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
Direction Principles of State Policy
- இது பகுதி 4ல் விதி 36லிருந்து 51 வரை இடம் பெற்றுள்ளது.
- அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது.
- இவை நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்த கூடியவை அல்ல.
- மக்களின் சமூக பொருளாதார ஜனநாயகத்தை உருவாக்க அடிப்படையாக அமைவதே இக்கொள்கை.
- மக்களுக்கு பொறுப்பான அரசாங்கம் எதுவும் DPSPயை சாதாரணமாக கருதக்கூடாது, இக்கருத்தை கூறியவர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்.
- அடிப்படை உரிமைகளும் DPSP யும் இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என்று கூறியவர் கிரான் வில்லி ஆஸ்டின்.
நோக்கங்கள்
- பொது நல அரசை உருவாக்குவது
- மக்களின் சமூக பொருளாதார நலம் காத்தல்.
- வழிகாட்டியாக இருப்பது.
- ஆட்சி செய்வதற்கு அடித்தளமாய் இருப்பவை.
- நேர்மறையான கட்டளைகள்
சமத்துவ கொள்கைகள்
- விதி 38 வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைத்தல்.
- விதி 39(C) சொத்துக்கள் சிலர் இடம் மட்டுமே குவிவதை தடுத்தல்.
- விதி 39(D) இருபாலருக்கும் சம வேலைக்கு சம ஊதியம்.
- விதி 39(E) சமநீதி ஏழைகளுக்கு சட்ட உதவி.
- விதி 39(J) குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வளர்ச்சி.
- விதி 43(A) தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கு பெறும் உரிமை.
- விதி 47 மக்களின் ஊட்டச்சத்து மற்றும் பொது சுகாதாரம்.
காந்தியக் கொள்கைகள்
- விதி 40 கிராம பஞ்சாயத்து அமைப்பு.
- விதி 43(B) கூட்டுறவு சங்கங்கள் அமைத்தல்.
- விதி 46 எஸ்சி எஸ்டி பிரிவினர்களின் நலன் காத்தல்.
- விதி 48 வதை செய்வதை தடுத்தல்
தாராளமயக் கொள்கைகள்
- விதி 44 அனைத்து குடிமக்களுக்கும் ஒரே சீரான உரிமையியல் தொகுப்பு சட்டம்.
- விதி 45 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குதல்.
- விதி 49 புராதான சின்னங்களை பாதுகாத்தல்.
- விதி 50 நீதித்துறையை நிர்வாகத் துறையில் இருந்து பிரித்தல்.
- விதி 51 பன்னாட்டு அமைதியையும் ஒற்றுமையையும் வரைதல்.
- விதி 48(A) சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரிகளை பாதுகாத்தல்.
- விதி 48 கால்நடை வளர்ப்பு பணி நவீன முறையில் வளர்த்தல்.
Tq sir
ReplyDelete