தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் இந்திய அரசியல் அமைப்பில்
தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் சட்டமன்றம் இந்திய அரசியல் அமைப்பில்
மத்திய அரசு
பாகம் 5ல் விதி 52 லிருந்து 151 வரை
- குடியரசு தலைவர்,
- பிரதமர்,
- நாடாளுமன்றம் மற்றும்
- நீதித்துறை ஆகியவற்றை பற்றி விளக்குகிறது
குடியரசு தலைவர்
- பாகம் 5ல் விதி 52 முதல் 78 வரை
- விதி 52 இந்திய அரசின் தலைவர் குடியரசு தலைவர்
- அவரே நாட்டின் முதல் குடிமகன்
- தகுதிகள் (விதி 58)
- இந்திய குடிமகன்
- 35 வயது
- லோக்சபா தகுதி
- ஆதாயம் தரும் பதவியில் இருக்க கூடாது
- குடியரசு தலைவருக்கான தேர்தல் (விதி 54)
- மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை.
- பாராளுமன்ற இரு அவையின் தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினார்கள்.
- மாநில சட்டமன்ற உறுபினர்கள்
- புதுச்சேரி மற்றும் டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்(1995)
- வாக்கு மதிப்பு
- MLA = (மாநில மக்கள் தொகை /தேர்ந்தெடுக்கபட்ட MLAகள்) * 1/1000
- MP = MLAகளின் மொத்த வாக்கு மதிப்பு / தேர்ந்தெடுக்கபட்ட MP களின் எண்ணிக்கை
- மக்கள் தொகை 2026வரை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை குறிக்கிறது.
- பதவி பிரமானம்(விதி 60)
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
- பதவி காலம்(விதி 56)
- 5 ஆண்டுகள்
- இவர் பதவி விலக நினைத்தால் துணை குடியரசு தலைவரிடம் ராஜுனாமா கடிதத்தை வழங்கலாம்.
- விதி 57ன் படி தேர்தலில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
- பதவி நீக்கம்(விதி 61)
- ஏதாவது ஒரு அவையில் 4ல் 1 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு(அரசியலமைப்பை மீறுதல்)
- 14 நாட்களுக்கு முன் அறிக்கை குடியரசு தலைவருக்கு வழங்கப்படும்(2/3 பங்கு)
- குடியரசு தலைவர் பதவி நீக்க முறையில் MLA கள் பங்கு கொள்ள முடியாது
- இதுவரை இப்பதவி நீக்க முறை நடைபெறவில்லை.
- பதவி காலியிடம்(விதி 62)
- 5 ஆண்டுகள்
- குடியரசு தலைவரின் இறப்பு
- பதவி துறப்பு
- பதவி நீக்கம்
- 5 ஆண்டுகள் முடியும் முன் தேர்தல் நடத்தபட வேண்டும்.
- பதவி காலியிடம் ஏற்பட்டு 6 மாதத்துக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இவர் ராஜுனாமா செய்யும் போது துணை குடியரசு தலைவர் இவரின் பணிகளை பார்த்து கொள்வார்
- துணை குடியரசு தலைவரும் இல்லாத போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பார்த்து கொள்வார்
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இல்லாத போது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பார்த்துகொள்வார்.
- அதிகாரங்கள் (நிர்வாகம்)
- குடியரசு துணைத் தலைவர்(விதி 63)
- 63 துணை குடியரசு தலைவரின் பதவி
- விதி 64 ராஜ்ய சபாவின் பதவி வழி தலைவர்
- விதி 65 குடியரசு தலைவரின் பதவி பொருப்பு
- விதி 66 தேர்தல்
- விதி 67 பதவிகாலம், பதவி நீக்கம்
- விதி 68 பணியிடத்தை நிரப்ப கால அவகசம்
- குடியரசு தலைவரால் நியமிக்கப்டும் பதவிகள்.
- பிரதமர் மற்றும் அமைச்சர்கள்
- உச்ச மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள்
- முப்படை தளபதிகள்
- CAG
- தேர்தல் ஆணையர்
- UPSC தலைவர்
- மனித உரிமைகள் ஆணையத் தலைவர்
- தகவல் ஆணையர்
- மத்திய விழிப்புணர்வு ஆணையர்
- அடானி ஜெனரல்
- தாழ்த்தபட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆணையத் தலைவர்கள்
- பிற நாட்டுக்கான இந்திய தூதுவர்கள்
- மாநில ஆளுநர்கள்
- துணைநிலை ஆளுநர்கள்
- தீர்ப்பாயத்தின் தலைவர்
- பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுகிறார்
- பாராளுமன்றத்தின் இரு கூட்டத் தொடர்களுக்கிடையே கால இடைவெளி 6 மாதத்திற்கு மேல் விடக் கூடாது.
- சுயேட்சையாக வென்ற குடியரசு தலைவர் விவி கிரி(1969)
எதிர்ப்பாளர் இல்லாமல் தேர்ந்தெடுக்கபட்டவர் சஞ்சீவி ரெட்டி (1977)
இதய துல்லா மட்டும் உச்சநீதி மன்ற நீதிபதி என்ற முறையிலும்(1969) துணை குடியரசு தலைவர் என்ற முறையிலும் (1982) குடியரசு தலைவர் பொறுப்பு வகித்தார்.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துணை குடியரசு தலைவர்கள்
- ராதா கிருஷ்ணன்
- இதய துல்லா
- ஷங்கர் தயால் ஷர்மா
துணை குடியரசு தலைவர் ராஜ்ய சபாவின் பதவி வழி தலைவர் என்ற முறையில் USA விலிருந்து பின்பற்றபடுகிறது.
பிரதமர்
- இந்திய அரசின் தலைவர் ( head of the state) குடியரசு தலைவர்
- இந்திய அரசாங்கத்தின் தலைவர் (head of the government பிரதமர்
- விதி 74 குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இருக்கும்
- விதி 75 குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்
- அறுதி பெரும்பான்மை கிடைக்காத போது குடியரசு தலைவர் பிரதமரை நியமனம் செய்கிறார்
- மொராஜு தேசாய் ஆட்சி கலைந்த போது நீலம் சஞ்சீவி ரெட்டி(துணை தலைவர்) சரண் சிங்கை பிரதமராய் நியமித்தார்
- ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து பிரதமராக நியமிக்கப்பட்டவர்கள்
- இந்திரா காந்தி
- தேவ கௌடா
- மன்மோகன் சிங்
- விதி 78 பிரதமரின் பணிகளை குறிப்பிடுகிறது
மத்திய அமைச்சர்களின் வகைகள்
கபினேட் அமைச்சர்
- முக்கியமான துறைகள் இவர்கள் வைத்திருப்பர்
minister of state
- தனி பொறுப்புடன் அல்லது கேபினட் அமைச்சருடன் இணைந்து வழங்கப்படும் துறை
deputy minsters
- கேபினட் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவர்
பாராளுமன்ற செயலாளர்கள்
- இவர்களுக்க தனிபட்ட துறை கிடையாது
- மூத்த அமைச்சர்களுடன் இணைந்து செயலாற்றுவார்
- 1967 முதல் இம்முறை நடைமுறையில் இல்லை.
கிச்சன் கேபினட்
- பிரதமர் மற்றும் 2 முதல் 4 வரையிலான அவரின் நம்பிக்கைகூரிய நபர்கள் அடங்கிய குழு
- உண்மையான அதிகார மையமாக திகழ்கிறது.
பாராளுமன்றம்
- பகுதி 5ல் விதி 79 லிருந்து 122 வரை
- விதி 79 பாராளுமன்றம் 3 அங்கங்களை உடையது
- குடியரசு தலைவர்
- மக்களவை
- மாநிலங்கள் அவை
- குடியரசு தலைவர் பாராளுமன்றத்தின் உறுப்பினர் அல்ல.
- மாநிலங்கள் அவை விதி 80 இது நிரந்தரமான அவை
- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 3ல் 1 பங்கு உறுப்பினர் ஓய்வு பெறுகின்றனர்
- அதிகபட்ச உறுப்பினர்கள் 250
- தற்போதய எண்ணிக்கை 245
- மாநில இடங்கள் 229
- யுனியன் பிரதேசங்கள் 4
- நியமன உறுப்பினர்கள் 12
- மக்களவை விதி 81
- பதவிக் காலம் 5 ஆண்டுகள்
- தேசிய நெருக்கடியின் போது 1 ஆண்டு காலம் நீட்டிக்கலாம்
- அதிகபட்ச உறுப்பினர்கள் 552
- தற்போது எண்ணிக் 545
- மாநில ஒதுக்கீடு 530
- யுனியன் பிரதேசங்கள் 13
- நியமன உறுப்பினர்கள் 2
- தொகுதி மறுவரையறை விதி 82
- 1952, 1962, 1972, 2002 ஆண்டுகளில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்களை பாராளுமன்றம் அமைத்தது
- 2026வரை தொகுதி எண்ணிக்கைகளை மாற்ற இயலாது
தகுதிகள் விதி 84
- மக்களாவைக்கு 25 வயது
- மாநிலங்களவைக்கு 30 வயது
- ஒரு MP 60 நாட்கள் வருகை தராவிடில் தகுதி இழப்பு செய்யபடுவார்.
- MP ராஜுனாமா கடிதத்தை சபா நாயகரிடம் தர வேண்டும்
- தகுதியற்ற நபர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகும் போது அதனை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதி மன்றன் பெற்றுள்ளது.
சபாநாயகரின் அதிகாரங்கள் விதி 93
- மக்களவையின் கூட்ட தொடரை நடத்துதல், கால வரையறையின்றி ஒத்தி வைத்தல்
- நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தை நடத்துகிறார்.
- பணமசோதாவை முடிவு செய்கிறார்
- கட்சி தாவல் உறுப்னிர்களின் தகுதி இழப்பினை முடிவு செய்கிறார்.
- சமமான நிலையில் ஓட்டளிக்கும் உரிமை பெறுகிறார்
ராஜ்ய சபா தலைவர்(விதி 89)
- பதவி வழி தலைவராக குடியரசு துணை தலைவர் உள்ளார்.
- மக்களவை சபா நாயகர் ராஜ்ய சபா தலைவரை விட 2 அதிகாரங்கள் பெற்றுள்ளார்.
- பண மசோதா
- நாடாளுமன்ற கூட்டுதொடர்
அவை தலைவர்
- மக்களவை விதிகளின் படி பிரதமர் அவை தலைவர் அல்லது பிரதமரால் நியமிக்கபடும் அமைச்சர்
எதிர்கட்சி தலைவர்
- 1977ல் எதிர்கட்சி தலைவருக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது
- கேபினட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்து
- 10ல் 1 பங்கு உறுப்பினர்களை பெற்றவர்
கொறடா
- கட்சி உறுப்பினர்களின் வருகை மற்றும் அவர்களின் நடத்தையை பேணுவது இவரின் பணி
மசோதாக்களின் வகைகள்
- பணமசோதா(விதி 110)
- மக்களவையில் மட்டும் கொண்டு வர முடியும்
- குடியரசு தலைவர் முன் அனுமதி வேண்டும்
- மாநிலங்கள் அவையில் 14 நாட்கள் மட்டும் காலம் தாழ்த்த முடியும்
- குடியரசு தலைவர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும்
- நிதி மசோதா விதி 117
- குடியரசு தலைவரின் முன் அனுமதி தேவையில்லை
- மாநிலங்கள் அவையில் திருத்தம் மேற்கொள்ளலாம்
- அரசியலமைப்பு திருத்த மசோதா(விதி 368)
- குடியரசு தலைவரின் முன் அனுமதி தேவை
- இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
- சாதாரண மசோதா
- மேற்கூறிய 3 இனங்களில் கூறப்படாத மசோதாக்கள்
பட்ஜட் விதி 112
- பட்ஜெட் என்ற சொல் அரசியலமைப்பில் இல்லை
- நிதி நிலை ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை
- 1921 முதல் ரயில்வே பட்ஜெட் ஹாக் ஒர்க் கமிட்டியின் படி தனியாக நிறைவேற்றபட்டு வந்தது
- 2017 - 18 முதல் ரயில்வே பட்ஜெட் பி பேக் கேகப்தாய் கமிட்டியின் படி ஒருங்கிணைந்த பட்ஜெட் ஆக நடைமுறைக்கு வந்தது
கேள்வி நேரம்
- மக்களவையின் முதல் அமர்வில் காலை 11 மணி முதல் 12 மணி வரை
- 2014 குளிர்கால கூட்ட தொடர் முதல் மாநிலங்களவையில் 12 முதல் 1 வரை கேள்வி நேரம் மாற்றபட்டுள்ளது
- கேள்விகளுக்கு முன் அனுமதி தேவை
நாடாளுமன்ற அவை நேரம்
- காலை 11 முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை
பூஜ்யம் நேரம்
- நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
- மாநிலங்கள் அவையில் காலை 11 மணி முதல் 12 மணி வரை
- பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் விவாதிக்கப்படும்.
- முன் அனுமதியின்றி கேள்விகள் கேட்கலாம்
- 1962 முதல் நடைமுறையில் உள்ளது
குறை எண்(விதி 100)
- பாராளுமன்றம் செயல்பட 1/10 உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்
- மக்களவையில் குறை எண் 55
- மாநிலங்கள் அவை குறை எண் 25
விதி 102 கட்சி தாவல் தடை சட்டம்
விதி 120 பாராளுமன்றம் மொழி
முதல் பட்ஜெட் ஆர். கே. சண்முக ரெட்டி (1947)
அதிக முறை பட்ஜெட் தாக்கல் மொராஜு தேசாய்( 10 முறை)
முதல் பெண் நிதி அமைச்சர் இந்திர காந்தி
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய சட்டம் 1954
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய சட்டம் 1976
மக்களவையில் சபாநாயகரும் மாநிலங்களவை தலைவரும் ஒரே ஊதிய விகிதத்தை பெற்றுள்ளனர்.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
- ஒவ்வொரு நிதி ஆண்டில் துவக்கத்திலும் குடியரசு தலைவர் அடுத்து வரக்கூடிய நிதி ஆண்டில் அரசின் திட்டங்களை கூறுவார்.
பாராளுமன்ற கூட்டு தொடர்கள்
- பட்ஜெட் கூட்டத் தொடர்
- பிப்ரவரி முதல் மே வரை
- மிக நீண்ட தொடர்
- மழை காலத் தொடர்
- ஜுன் முதல் ஆகஸ்டு வரை
- குளிர் காலத் கூட்டத் தொடர்
- நவம்பர் முதல் டிசம்பர் வரை
- மிக குறுகிய கூட்டத் தொடர்
மக்களவை இடங்கள்
- அதிக மக்களவை இடங்கள் (உத்திரபிரதேசம் 80 இடங்கள்)
- தமிழ்நாடு 39 இடங்கள்
- டெல்லி 7 இடங்கள்
- குறைவான இடங்கள்
- சிக்கிம் 1
- நாகாலாந்து 1
- மிசோரம் 1
மாநிலங்களவை இடங்கள்
- அதிக மாநிலங்களவை இடங்கள் (உத்திர பிரதேசம் 31)
- தமிழ்நாடு 18
- டெல்லி 3
- குறைவான இடங்கள்
- மிசோரம் 1
- கோவா 1
- திரிபுரா 1
- மணிப்பூர் 1
- மேகாலயா 1
- நாகாலாந்து 1
- அருணாச்சல் பிரதேசம் 1
Ji.. super ji... இன்னும் இதே மாதிரி மத்த topics kum போடுங்க
ReplyDelete