குப்தர்கள் பகுதி II
குப்தர்களின் கட்டிடக் கலை
சாஞ்சி கோவில்
- தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
பார்வதி கோயில் மாகராஷ்ட்டிரா
- விமானத்துடன் கூடிய(இரண்டாம் மாடி) தட்டையான கூரை கொண்ட சதுரக் கோயில்கள்
தசாவதாரா கோவில்
- வளைகோட்டுக் கோபுரம் கொண்ட சதுரக் கோயில்கள்
- கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை மூள்றாவது பாணியின் சிறப்பு ஆகும். அது நகர முறையின் முக்கிய அம்சமாகும்.
- செவ்வக வடிவிலான கோயில்கள்
மாணியர் மாத் இராஜ்கிர்
- வட்ட வடிவக்கோயில்கள்
- இக்கோயில்கள் வட இந்தியாவில் நாகர கட்டடக்கலைப் பாணியிலும் தென்னிந்தியாவில் திராவிடக் கட்டடக்கலைப் பாணியிலும் பின்னர் கட்டப்பட்டன.
விஷ்ணு கோவில் திக்வா மத்திய பிரதேசம்
- தியோகர் என்ற இடத்தில் பஞ்சயாதன முறைப்படி மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை மையப்படுத்தித் தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது. மேலும், அங்கு சாந்தி நாதர் என்ற சமணத்துறவிக்கு கோயிலும், ஜபல்பூர் அருகில் திகாவா என்ற இடத்தில் மகாவிஷ்ணுவிற்குக் கோயிலும் கட்டப்பட்டன
குப்தர்களின் பெரும்பாலான கோயில்கள் ஹீணர்களின் படையெடுப்பின் போது இடிக்கப்பட்டன. ராஜகிருகம், சாரநாத் போன்ற இடங்களில் அழகிய பௌத்த ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன.
உதயகிரி குகைகள்
- உதயகிரி குகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்து விதிஷா என்ற இடம் மத்தியப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள இருபது பாறைகளில் வெட்டப்பட்ட குகைகள் (புவனேஸ்வர், ஒடிஷாவிற்கு அருகிலுள்ள உதயகிரி குகைகளுடன் குழப்பமடையக்கூடாது)
- இந்த தளம் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தா ஆகியோரின் ஆட்சிகளைச் சேர்ந்த குப்த வம்சத்தின் முக்கியமான கல்வெட்டுகளைக் கொண்டுள்ளது.
புத்தகுப்த தூண்
- பொ.ஆ. 476 முதல் 495 வரை ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புத்தகுப்த தூண் ஜனார்தனாவின் நினைவாக எழுப்பப்பட்டது மறுபெயர் விஷ்ணு உயரத்தில் கருடானின் இரட்டை சிலை, தலைக்கு பின்னால் ஒரு சக்கரம் உள்ளது
- இப்போழுது இந்த பகுதி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால நகரம் மற்றும் தொல்பொருள் இடமாகும்.
- இந்த கல்வெட்டு சமுத்ர குப்தர் காலத்தியது
கயா செப்பு பட்டையம் சமுத்திர குப்தர் காலம்
சூல்தான்கஞ் புத்த சிலை
- இது இப்போது பர்மிங்காம் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் பர்மிங்காம் இங்கிலாந்தில் உள்ளது
சிற்பக் கலை
- குப்தர்கள் காலத்தில் சிற்பக்கலை சிறப்புற்றிருந்தது. மதுராவில் குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையில் கிரேக்கக்கலையின் சாயல் உள்ளது.
- சாரநாத்தில் நின்ற வடிவிலுள்ள புத்தர் சிலை சிறப்பாக அமைக்கப்பட்டது.
- சாரநாத் கலை பாணி இந்தியாவில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
- இது கனிஷ்கர் காலத்தின் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது
நடனக்கலை
- திருவிழா நேரங்களில் கோயில்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றன. அரசவையிலும் நடனங்கள் இடம்பெற்றன. நடனக்கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
- நடனக்கலைக்கும் குப்தர்கள் பேராதரவு தந்தனர்.
- சாரநாத், மதுரா, அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலை நுட்பங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன. எனவே, குப்தர் காலம் செவ்வியல் கலைகளின் காலம் என்று அழைக்கப்படுகிறது.
சூட்டிகொண்ட பட்டங்கள்
அரசர்கள்
- மகாராஜாதிராஜ,
- பரத பட்டாரக,
- பரமேஷ்வர
போன்ற பட்டங்களை ஏற்றார்கள்,
- பரம தைவத(கடவுளின் பரமபக்தன்),
- பரம பாகவத (வாசுதேவ கிருஷ்ணணின் பரமபக்தன்)
போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர்.
குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்ற பிம்பத்தை முன்வைத்தாகவும் சில வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
அரசருக்கு, ஒரு தெய்வீகத் தகுதி நிலையை நிறுவிம் முயற்சிகளாக இவற்றைத் கருதலாம்.
குப்த பேரரசின் நிர்வாக பிரிவுகள்
தேசம் அல்லது புக்தி - உபாரிகா(ஆளுநர்)
- குப்தர்களின் பேரரசு தேசம் அல்லது புக்தி எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
- உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன.
- உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.
- உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர்.
- உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு, யானைகள், குதிரைகள், வீரர்கள் என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
- தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் இவர்களுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது.
- குப்த ஆண்டு 165(என்பது குப்தர்கள் ஆட்சி தொடங்கி 165வது ஆண்டு) என்று தேதியிடப்பட்டுள்ள புத்தகுப்தரின் ஈரன் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சி செய்த லோகபாலா என்று மாராஜா சுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது.
- இங்கு லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.
மாவட்டங்கள் - விஷ்யபதி(விஷ்யா)
- குப்தப்பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
- சிலசமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார்.
- விஷ்யபதியின் நிர்வாகக் கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவிபுரிந்தார்கள்.
மாவட்ட மட்டத்திற்குக் கீழ்
- விதி,
- பூமி,
- பதகா,
- பீடா
என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன.
கிராமம் - (கிராமிகா, கிராம் அத்யக்ஷா)
- கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர்.
- இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர்.
- புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு, மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல - அதிகாரனா(எட்டு உறுப்பினர் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது.
- மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று பல பொருள் உண்டு.
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது.
- இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.
குமாரமாத்யா
- குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது.
- இந்தப் பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் உள்ள ஒரு உயரதிகாரியைக் குறிப்பிடுவது போல் உள்ளது.
- இந்தப் பொறுப்புகள் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, அலகாபாத் பிரசஸ்தியை மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டுஎழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார்.
- அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.
சபா
- குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது.
- அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது.
- இது அமைச்சர் குழுவாக இருக்கலாம்.
- அமைச்சர் குழு
- மஹாசந்திவிக்ரஹா (அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்)
- தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா(நீதித்துறை, ராணுவம்)
- மஹாஅஸ்வபதி(குதிரைப்படைத் தலைவர்)
மஹாசந்திவிக்ரஹா (அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்)
- மஹாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார்.
- இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்.
- இவர்தான் போர் தொடுத்தல், உடன்பாடு காணுதல், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல் என்று பிற நாடுகளுடனான தொடர்புகளுக்குப் பொறுப்பானவர்.
தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா(நீதித்துறை, ராணுவம்)
- நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார்.
- ஒரு முத்திரை அக்கினிகுப்தர் என்ற மஹாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது.
- அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது. இவையனைத்தும் இந்தப் பதவிகள் எல்லாம் வாரிசுரிமையாக வருபவை என்பதைக் காட்டுகின்றன.
மஹாஅஸ்வபதி(குதிரைப்படைத் தலைவர்)
- மற்றொருவருக்கு மஹாஅஸ்வபதி(குதிரைப்படைத் தலைவர்) என்ற பதவி இருந்துள்ளது.
- பாலாதிகிருத்யா, மஹாபாராதிகிருத்யா(காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி) போன்ற ராணுவப் பதவிகளைக் குறிப்பிடுகின்றன.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சேனாபதி என்ற சொல் குப்தர் கல்வெட்டுகளில் காணப்படவில்லை,
குப்தர் காலத்து அரசு அலுவலகங்கள்
- ரணபந்தகர் ராணுவக்கிடங்கின் அலுவலகம்
- தண்டபாஷிகா மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகமாக
- மஹாபிரதிஹரா(அரண்மனைக் காவலர்கள் தலைவர்),
- கத்யதபகிதா(அரச சமையலறைக் கண்காணிப்பாளர்) போன்ற அரண்மனையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்து அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- துடகா என்றழைக்கப்பட்ட ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பும் இருந்தது. ஆயுக்தகா என்பது மற்றொரு உயர்மட்ட அதிகாரப் பதவியும் இருந்துள்ளது
- அக்ஷபதலதிக்திருதா அரசு ஆவணங்களை பராமரித்தார்
குப்தர் கல்வெட்டுகள் குறிப்பிடும் வேறு சில பெயர்கள்
- கிலிப்தா,
- பலி,
- உத்ரங்கா,
- உபரிகரா,
- இரண்யவெஷ்சி(கட்டாய உழைப்பு என்று பொருள்)
பொருளாதார நிலைகள்
- குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நீதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும். இந்நூல் அரசு கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
- பயிர்களை நாசம் செய்வோருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
- மேலும், பயிர்களைச் சுற்றியும் வேளாண் நிலங்களைச் சுற்றியும் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
- காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிக்குப் புகழ்பெற்றிருந்தது தெரியவருகிறது.
- பழமரங்கள் வளர்ப்பது குறித்து வராகமிகிரர் விரிவான அறிவுரைகளைத் தந்துள்ளார்.
குப்தர் காலத்து நிலங்களின் வகைகள்
பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது
- க்ஷேத்ரா பயிரிடக்கூடிய நிலம்
- கிலா தரிசு நிலம்
- அப்ரஹதா காடுஅல்லது தரிசு நிலம்
- வாஸ்தி குடியிருக்கத் தகுந்த நிலம்
- கபடசஹாரா மேய்ச்சல் நிலம்
குப்தர் காலத்து நீர் மேலாண்மை
பந்தியா, கரா அணைக்கரைகள்
- நாரதஸ்மிருதி என்ற நூலில், வயல்களை வெள்ளங்களிலிருந்த பாதுகாத்த பந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.
ஜலநிர்கமா(வடிகால்கள்)
- தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.
- நதிகளிலிருந்து மட்டுமில்லாமல், ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
- சுதர்சன ஏரியை(கிர்ணர் கல்வெட்டு) மௌரியர் காலத்து ஏரி) துர்வாரியவர் ஸ்கந்த குப்தர்
விவசாயிகளின் நிலை
- விவசாயிகளின நிலைமை கீழ் நிலையில் இருந்தது.
- சாதி காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும் மானியங்கள் வழங்கப்பட்டதன் காரணமாகவும் அவர்கள் கொத்தடிமைகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வரிகள்
பாகா
- விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்காகும்
போகா
- அரசருக்கு கிராமங்கள் அவ்வப்போது வழங்க வேண்டிய பழங்கள், விறகுகள், பூக்கள் போன்றவை
பலி
- ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை வரி
உதியங்கா
- காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக விதிக்கப்பட்ட காவல் வரியாக இருக்கலாம் அல்லது நீர் வரியாகவும் இருக்கலாம், எனினும்.
ஹிரண்யா
- தங்க நாணயங்கள் மீது விதிக்கப்படும் வரி என்பது நேரடிப் பொருள் நடைமுறையில் இதுசில குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை, அரசின் பங்காகப் பொருளாகவே அளிப்பதாகும்
வாத பூதா
- கற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்
ஹலிவகரா
- கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொரு உழவரும் கட்ட வேண்டிய வரி
சுல்கா
- வர்த்தகர்கள் நகரத்திற்கோ துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிகச் சரக்குகளில் அரசருக்கான பங்கு. இதைச் சுங்க வரி மற்றும் நுழைவு வரிகளுக்கு ஒப்பிடலாம்.
குப்தர் காலத்து உலோகத் தொழில்கள்
- குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள் சரங்கத் தொழில், உலோகவியல் ஆகியன ஆகும். சுரங்கங்கள் இருந்தத குறித்து அமரசிம்மர், வராஹமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.
- இக்காலகட்டத்தில், உலோகவியல் நுட்பங்கள் உச்சத்தில் இருந்தன என்பதை நிறுவுவகற்கு, இன்று தில்லி குதுப்மினார் வளாகத்தில் காணப்படும் மெஹ்ரோல் இரும்புத்தூண் சான்றாகக் காட்டப்படுகிறது
வங்கத்தின் தாமிரலிப்தி
- தாமிரலிப்தி கிழக்குக் கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என்று பாஹியான் குறிப்பிடுகிறார்.
- சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர் கொள்ள நேரும் இடர்கள் குறித்து பாஹியான் குறிப்பிடுகிறார். அபூர்வமான ரத்தினக் கற்கள், மெல்லிய துணிவகைகள், வாசனைத் திரவியங்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன. சீனாவிலிருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
சமஸ்கிருத இலக்கியம்
சமஸ்கிருதத்தை அலுவல் மொழி
சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்.
- அமரசிம்மரால் அமரகோசம் (சமஸ்கிருத சொற்களஞ்சியம்)
- சந்திரகோமியர் சந்திரவியாகரணம் (இலக்கண நூல்)
- வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர்
- இன்று நாம் அறிந்திருக்கும் வடிவில் புராணங்கள் இந்தக் காலத்தில் தான் இயற்றப்பட்டன
- மஹாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேறிச் செம்மையடைந்து தமது இறுதி வடிவினைப் பெற்றன.
சமண இலக்கியம் (பிராகிருத மொழி)
- சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர்தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. குறுகிய காலத்திலேயே சமண மதம் பல பெரிய அறிஞர்களை உருவாக்கிவிட்டது.
- இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளைப் பரப்பப் பல இந்து புராணங்களும், இதிகாசங்களும் சமண மதக் கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
- விமலா சமண இராமாயணத்தை எழுதினார்.
- சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
பௌத்த இலக்கியம் (பாலி மொழி)
- தொடக்க கால பௌத்த இலக்யிங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன.
- பின்னர் சமஸ்கிருதத் கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
- ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
- தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
- வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினர்.
சமயம் சாரா இலக்கியம்
- சமுத்திரகுப்தரே கவிராஜா என்று புகழ்பெற்றவராவார்.
- காளிதாசர், அமரசிம்மர், விசாகதத்தர், தன்வந்திரி போன்ற நவரத்தினங்கள் அவரது அவையை அலங்கரித்ததாகப் பரவலாக நம்பப்படுகிறது
- காளிதாசர்
- இயற்கையை, அழகை எழுதிய கவிஞர்
- சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்ரமோர்வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள்,
- சூத்ரகர் (மிருச்சகடிகம்),
- விசாகதத்தர்(முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம்) ஆகியோர் படைப்புகள் வெளியாகின
- பஞ்சதந்திர கதைகள் குப்தர்கள் காலத்தில் தான் தொகுக்கப்பட்டது
- 18 புரணங்கள் முழுமை பெற்றதும் குப்தர் காலத்தில் தான்
- மற்றும் மாஹாபாரதம் ராமாயனம் குப்தர் காலத்தில் தான் முழுமையடைந்தது
கணிதமும், வானவியலும்
சுழியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டுபிடித்தது, அதன்விளைவாக பதின்ம இலக்க முறை கண்டுபிடித்தது ஆகிய பெருமைகள் இக்காலகட்டத்தின் அறிவியலாளர்களையேச் சாரும்.
ஆரியபட்டர்
- சூரிய சித்தாந்தா என்ற நூலில் ஆரியபட்டர்(பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 6 நூற்றாண்டின் துவக்கம் வரை)
- சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
- பூமியின் சுற்றளவி குறித்த கணக்கீட்டில் ஆரியபட்டர் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. பூமி ஒரு அச்சில் கன்னைத் தானே சுற்றுகிறத என்பதைக் கண்டுபிடித்த முதல் வானவியலாளர் அவர்தான் கணிதம், கோணவியல், அல்ஜுப்ரா ஆகியவற்றைப் பேசும் ஆரியபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.
வராகமிகிரர்(6ஆம் நூற்றாண்டு )
- பிருஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்
- பஞ்ச சித்தாந்திகா,
- பிருஹத்ஜாதகா ஆகியவை இவரது மற்ற படைப்புகளாகும்
பிரம்மகுப்தர்(6 ஆம் நூற்றாண்டு இறுதி முதல் 7ஆம் நூற்றாண்டின் துவக்கம் )
- பிரும்மஸ்புத சித்தாந்தா,
- கண்டகாத்யகா
- கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
நூல் ஆசிரியர் நூல்கள்
தண்டி காவியதர்சா, தாசாகுமரா சித்ரா
பாரவி கிருத்தர்ஜுயம்
பணிணி அஸ்டத்தாயி
பதஞ்சலி மாகாபாஷ்யா
மருத்துவ அறிவியல்
- முதல் அருவை சிக்கிச் நிபுணர் சுஸ்சுருதர்
- மருந்துகள் தயாரிப்பதற்து உலோகங்களைப் பயன்படுத்துதல், பாதசரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது குப்தர் ஆட்சிக் காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது
- நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறுகிறது.
- பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
- இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதைக் காட்டுகிறது
நன்றி sir
ReplyDeleteகுப்தர்கள் முடிந்ததா இல்லை part 3 இருக்குதா சார்
ReplyDeleteFinished
DeleteThank you sir ... Syllabus la irukkura all topics Kum intha mathiri notes podunga use full ah irukuthu sir
Deletesure day by day update ஆகும்
Deletehttps://vcky115.blogspot.com/2020/12/i_28.html
Delete(டெல்லி சுல்தான்கள் பகுதி I)