இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள்
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள்
அடிப்படை உரிமைகள்
- பகுதி 3
- விதி 12 முதல் 35 வரை
- தனி மனித சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை நிலை நாட்டுகிறது
- மக்களின் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டுகிறது
- அடிப்படை உரிமை அமெரிக்க அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது
- இந்தியாவின் மேக்னா கார்ட்டா என அழைக்கப்படுவது அடிப்படை உரிமைகள் ஆகும்
தற்போது ஆறு வகை அடிப்படை உரிமைகள் உள்ளன
- சமத்துவ உரிமை 14 முதல் 18
- சுதந்திர உரிமை 19 முதல் 22
- சுரண்டலுக்கு எதிரான உரிமை 23 முதல் 24
- சமய அல்லது மத சுதந்திர உரிமை 25 முதல் 28
- கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை 29 முதல் 30
- அரசியலமைப்பின் படி பரிகாரம் தேடும் உரிமை 32
சொத்துரிமை 31
- அடிப்படை உரிமைகளில் இருந்து நீக்கி பகுதி 12 விதி 300Aல் வைக்கப்பட்டுள்ளது
- சொத்துரிமையை நீக்கிய சட்டத்திருத்தம் 44
- 1978ஆம் ஆண்டு நீக்கப்பட்டது
விதி 12 மற்றும் விதி 13
- விதி 12 அரசு எனும் வார்த்தையை வரையறுக்கிறது
- விதி 13 நீதி மறு ஆய்வு
சமத்துவ உரிமை
விதி 14 சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
- சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாட்டை வழங்கிய நாடு இங்கிலாந்து
- சட்டத்தின் ஆட்சி எனும் கோட்பாட்டை வழங்கியவர் ஏ பி டைய்சி
- சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதாகும்
- எந்த ஒரு மனிதனும் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்.
- அரசியலமைப்பு சட்டமே ஒரு நாட்டின் முதன்மை சட்டமாகும்
விதி 15 ஜாதி மதம் இனம் பாலினம் பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதை தடைசெய்கிறது
- விதிவிலக்கு சமூக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு
- எடுத்துக்காட்டு ஓபிசி கோட்டா ஆக்ட்
விதி 16 பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு
- சமூக பொருளாதாரத்தில் நலிந்தவருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம்
மண்டல் கமிஷன்
- 1979ல் மொரார்ஜு தேசாயால் அமைக்கப்பட்டது
- இது இரண்டாவது பிற்படுத்தப்பட்ட அமைப்பு
- முதலாவது பிற்படுத்தப்பட்ட அமைப்பு 1953ல் கலேல்கரால் அமைக்கப்பட்டது
- அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட வருடம் 1980
- முதன் முதலில் ஓபிசி க்கு இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது
- ஒபிசி 27% வழங்கியவர் விபி சிங் 1990
- மண்டல் வழக்கு இந்திரா சகாணி எதிர் யூனியன் ஆப் இந்தியா வழக்கு 1992
மண்டல் வழக்கின் தீர்ப்பு
- க்ரீமி லேயர் க்கு இட ஒதுக்கீடு கிடையாது
- பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாது
- மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக்கூடாது
- பிற்படுத்தப்பட்டோருக்கான நல ஆணையம் விதி 340
- கிரீமிலேயர் வரையறுத்த கமிட்டி ராமநந்தன் கமிட்டி
- பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1993
மத்திய அரசுசின் இட ஒதுக்கீடு
- ஓபிசி 27 %
- எஸ் சி 15 %
- எஸ் டி 7.5%
தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994
- தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு அளிக்கிறது
- பிசி 30
- எம்பிசி 20
- எஸ்சி 18
- எஸ்டி 1
- பிசிஎம் 3.5
- எஸ்சி ஏ 3
- மாற்றுத்திறனாளிகள் 3
- பிஎஸ்டிஎம் 20
விதி 17 தீண்டாமை
- தீண்டாமை ஒரு தண்டனைக்குரிய குற்றம்
- தீண்டாமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1955
- 1976இல் திருத்தப்பட்டு குடிமக்களின் உரிமை பாதுகாப்பு சட்டம் 1955 என பெயர் மாற்றம் பெற்றது
- தீண்டாமை குற்றத்தின் தண்டனைகள் 6 மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம்
- தேர்தலில் போட்டியிட முடியாது
- தீண்டாமை எனும் வார்த்தை அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை
- மைசூர் உயர் நீதிமன்றம் வரையறை அளித்தது
விதி 18 கௌரவப் பட்டங்கள் ஒழிப்பு கல்வி மற்றும் ராணுவம் தவிர
- பாலாஜு ராகவன் எதிர் இந்தியன் யூனியன் வழக்கு 1996
- பாரத ரத்னா பற்றியது
சுதந்திர உரிமை
விதி 19 தற்போது 6 சுதந்திர உரிமைகள் உள்ளன
- விதி 19 1(A) பேச்சுரிமை
- விதி 19 1(B) அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம்
- விதி 19 1(C) கழகங்கள் சங்கங்கள் அமைப்பதற்கான சுதந்திரம்
- விதி 19 1(D) இந்தியாவில் எப்பகுதிக்கும் செல்லும் உரிமை
- விதி 19 1(E) எந்த பகுதியிலும் தங்கலாம்
- விதி 19 1(G) எவ்வித தொழில் வாணிகம் செய்யும் உரிமை
விதி 20 தண்டிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு
மூன்று வகைகள் உள்ளன
- குற்றவியல் வழக்குகளில் முன் தேதியிட்டு தண்டிக்கக் கூடாது
- ஒரு குற்றத்திற்காக ஒரு முறை மட்டுமே தண்டனை
- தன்னைத்தானே குற்றம் சாட்டுதல் கூடாது
விதி 21 வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம்
- விதி 21 A கல்வி பெறும் உரிமை 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
- 86ஆவது திருத்தம் 2002ல் சேர்க்கப்பட்டது
- கல்வி பெறும் உரிமை சட்டம் 2009
- நடைமுறைக்கு வந்தது ஏப்ரல் 1 2010
விதி 22 சில சூழலில் கைது மற்றும் சிறை காவலில் வைப்பதற்கு எதிரான பாதுகாப்பு
- கைது செய்வதற்கு சரியான காரணம்
- 24 மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஆஜர்படுத்துதல்
- நீதிபதி வழங்கும் காலக்கெடு மேல் காவலை நீட்டிக்க முடியாது
சுரண்டலுக்கு எதிரான உரிமை
விதி 23 மனிதர்களை சட்டவிரோத தொழில்களை செய்தலை தடுத்தல்
- இதற்கான சட்டம் 1956ல் இயற்றப்பட்டது
- கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1976
- சம வேலைக்கு சம ஊதியம் 1976
- ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970
விதி 24 குழந்தைத் தொழிலாளர் முறையை தடை செய்தல்
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தடை செய்தல்
- குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 1986
- தொழிற்சாலைகள் சட்டம் 1948
- தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951 (12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்)
- சுரங்க சட்டம் 1952(15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்)
- தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2005
- குழந்தை தொழிலாளர் முறையை உச்ச நீதிமன்றம் தடை செய்த வருடம் 2006
சமய மற்றும் மத சுதந்திர உரிமை
விதி 25 எல்லோரும் தங்கள் மனசாட்சிக்கு உகந்த சமயத்தை கொள்ளுதல்
விதி 26 மத சம்பந்தமான விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
விதி 27 குறிப்பிட்ட ஒரு மதத்திற்காக வரி செலுத்தாமல் இருக்கும் உரிமை
விதி 28 கல்விக்கூடங்களில் சமய போதனைகள் மீதான கட்டுப்பாடு பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
விதி 29 சிறுபான்மையினர் கல்வி பண்பாடு நலன் காத்தல்
விதி 30 சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை அமைக்கவும் நிர்வகிக்கவும் உரிமை சிறுபான்மையினர் எனும் சொல் அரசியலைப்பில் குறிப்பிடப்படவில்லை
விதி 32 அரசியலமைப்பு சட்டப்படி பரிகாரம் தேடும் உரிமை
- விதி 32 மீறப்படும்போது நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம்
- அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட ஐந்து வகை நீதிப் பேராணைகள் பிறப்பிக்கப்படும்
- நீதிப் பேராணைகள் இங்கிலாந்தில் இருந்து பெறப்பட்டது
- நீதிப்பேராணை என்பது லத்தின் மொழி சொல்
ஆட்கொணர்வு மனு Herbeas Corpus
- சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனவரை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தல்
Mandamus
- நீதிமன்றத்தால் அதிகாரிகளுக்கோ தீர்ப்பாயங்கள் அரசுக்கோ தனது பொது கடமை செய்யுமாறு உத்தரவிடுங்கள்
- தனிநபருக்கு உத்தரவிட முடியாது
Prohibition
- கிழமை நீதிமன்றங்களுக்கு தீர்ப்பாயங்களுக்கும் தமது அதிகார வரம்பினை மீறாத இருக்கும்படி வழங்கப்படும் உத்தரவு
Certiorari
- கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள் அவற்றின் அதிகார வரம்பை மீறி வழங்கும் உத்தரவுகளை தள்ளுபடி செய்தல்
- 1991லிருந்து நிர்வாக அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது
Quo warranto
- பொதுப் பணியில் இருக்கும் ஒருவர் அப்பதவிக்கு தகுதியானவரா என ஆராய வழங்கும் உத்தரவு
- அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் உச்சநீதிமன்றம்
- உயர் நீதிமன்றம் 226க்கு நீதிப் பேராணை வழங்கலாம்
- டாக்டர் அம்பேத்கர் கூற்றுப்படி விதி 32 என்பது அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் முக்கியமான சரத்து மற்றும் அடிப்படை உரிமைகளின் அடிப்படை ஆகும்
விதி 33 முப்படைகள் காவல் துறை ஆகியவற்றுக்கு அடிப்படை உரிமைகள் பொருத்துவதில் சில கட்டுப்பாடு உள்ளன
விதி 34 ராணுவ ஆட்சி நடைமுறையில் இருக்கும் பகுதிகளுக்கு அடிப்படை உரிமை பொருந்தாது
விதி 35 சில அடிப்படை உரிமைகள் தானாக நடைமுறைக்கு வரும் சிலவற்றை நடைமுறைப்படுத்த பாராளுமன்றம் சட்டமியற்ற வேண்டும்
இந்தியர்களுக்கு மட்டும் வழங்கும் உரிமைகள் 15 16 19 29 30
தேசிய நெருக்கடியின் போது விதி 359 இன் படி 20 மற்றும் 21 தவிர அனைத்து உரிமைகளையும் நிறுத்தி வைக்கலாம்
தேசிய நெருக்கடி நிலையின் போது
- விதி 358 படி 19 ஆறு அடிப்படை சுதந்திரங்களையும் செயலிழந்து போகச் செய்ய முடியும் ஆனால் ஆயுதம் ஏந்திய கலவரத்தின் போது விதி 19 மறுக்கப்படக் கூடாது
- விரிவான அடிப்படை உரிமைகளை கொண்ட நாடு இந்தியா
Comments
Post a Comment